Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கி,19 வருட காத்திருப்பு.. இந்தியாவின் 34 வருட வளர்ச்சி.. 3வது டெஸ்டில் படைக்கவிருக்கும் வரலாறு!

ஹெட்டிங்லி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில் எந்த அணி வெற்றி பெற்றாலும், புதிய வரலாறு படைக்கப்படவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு டிராவானது.

2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர்.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து 20 ரன்களுக்கும் மேல் முன்னிலை வகித்திருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணியே தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

கட்டாயம்

கட்டாயம்

இதன் காரணமாக இங்கிலாந்து அணி மீது அந்நாட்டு ரசிகர்களே விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக தவறான முடிவுகளை எடுத்த கேப்டன் ஜோ ரூட் மீது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவும், இந்திய அணி தனது வெற்றி பயணத்தை தொடரவும் படுதீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மைதானமும், லார்ட்ஸை போலவே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில், எந்த அணி வெற்றி பெற்றாலும் புதிய வரலாறு ஒன்றை படைக்கவுள்ளது.

நேருக்கு நேர் மோதல்

நேருக்கு நேர் மோதல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 6 முறை லீட்ஸ் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹோம் அணியான இங்கிலாந்து அணி மூன்று முறையும், இந்திய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1979ம் ஆண்டு நடைபெற்ற போட்டி மட்டும் சமனில் முடிவடைந்தது.

யாருக்கு சாதகம்

யாருக்கு சாதகம்

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவை விட இங்கிலாந்து அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆனால் கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசி 2 போட்டிகள் முறையே 1986ம் ஆண்டும், 2002ம் ஆண்டு நடைபெற்றது. இந்த இரண்டிலுமே இங்கிலாந்து அணி தோல்வியையே தழுவியுள்ளது. எனவே இந்திய அணியும் சம பலத்துடன் உள்ளது.

19 வருட காத்திருப்பு

19 வருட காத்திருப்பு

19 வருட கால காத்திருப்பை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இங்கிலாந்து அணியும், 34 வருட வெற்றி பயணத்தை தொடர்ந்து வழிநடத்தி செல்ல இந்திய அணியும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு ஹோம் அட்வாண்டேஜ் இருந்தாலும், அந்த அணியின் தற்போதைய ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்திய அணியின் பவுலிங்கை அந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை தவிர வேறு எந்த வீரராலும் சமாளிக்க முடியாமல் உள்ளது. எனவே ரூட்டின் கதையை முன்கூட்டியே முடித்துவிட்டால், இந்தியாவின் வெற்றி பிரகாசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Wednesday, August 25, 2021, 11:08 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+