Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என் நண்பருக்கு இந்திய அணியில் இடம் கொடுங்க”.. இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கோரிக்கை

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தனது நண்பர் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கூறி இருக்கிறார். தனது நண்பர் ஆடுகளத்துக்கு வெளியே அமர்ந்திருப்பதை பார்க்க தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரின் போது குல்தீப் யாதவ், கெவின் பீட்டர்சன் உடன் இணைந்து பணியாற்றினார். அவர்கள் இருவரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்தனர். குல்தீப் யாதவ் அந்த அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த நிலையில், கெவின் பீட்டர்சன் அந்த அணியில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

Kuldeep Yadav Kevin Pietersen Team India Test Series

2025 ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு பந்து வீசுவது என தாங்கள் இருவரும் டெஸ்ட் தொடர் குறித்து பேசியதாகவும், தான் அவருக்கு பல ஆலோசனைகளை அளித்ததாகவும் கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார். அப்படி பல ஆலோசனைகளைப் பெற்ற பிறகும் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது பற்றி கெவின் பீட்டர்சன் பேசியதாவது: "இந்திய அணி குல்தீப் யாதவை ஆட வைக்க வேண்டும். இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது; ஒரு போட்டியில் வென்றுள்ளது. அவர்களிடம் பந்துவீச்சில் சில மாறுபாடுகள் இல்லை. எனவே, குல்தீப் யாதவை அவர்கள் ஆட வைக்க வேண்டும்."

"நான் அவருடன் ஐபிஎல் தொடரின் போது சில முறை அமர்ந்து பேசி இருக்கிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது நாங்கள் இங்கிலாந்தில் எப்படி பந்து வீசுவது என்று ஆலோசித்து இருக்கிறோம். சில வியூகங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். எந்த இடத்தில் பந்து வீசுவது, எப்படி பந்து வீசுவது என நான் அவரிடம் நிறைய பேசினேன். நாங்கள் நிறைய நேரத்தை இதற்காக செலவிட்டு இருக்கிறோம். எனவே, அவர் ஆடுவதைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்."

"குல்தீப் பந்து வீசுவதை விரும்புகிறார். விக்கெட் எடுப்பதை விரும்புகிறார். எனது நண்பர் ஆடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் வெளியே அமர்ந்திருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை" என்று கெவின் பீட்டர்சன் கூறினார்.

குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்று 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். அதில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது பௌலிங் சராசரி 22.3 ஆகவும், எக்கானமி 3.45 ஆகவும் உள்ளது. குல்தீப் யாதவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 9, 2025, 21:49 [IST]
Other articles published on Jul 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+