Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG Leeds weather prediction: இரு அணிகளுக்கும் காத்திருக்கும் சவால்.. 4வது நாளில் சிக்கல்

லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வானிலை நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா லீடிங்கில் உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வியக்க வைத்தது.

மிரட்டலான ஃபார்ம்

மிரட்டலான ஃபார்ம்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை மறுதினம் (ஆக.25)ம் தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வியூகங்களை அமைத்து வருகிறது. அதேசமயம், இந்திய அணியின் லார்ட்ஸில் கடைசி நாளில் வெளிப்படுத்திய மிரட்டலான ஃபார்மை அப்படியே கடத்தி வந்து இந்த போட்டியிலும் அமல்படுத்தும் முனைப்பில் உள்ளது. இதனால், இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போட்டி தொடங்க, இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், எக்ஸ்பெர்ட்ஸ் பலரும், தங்கள் மாதிரி பிளேயிங் லெவன் அணியில், புஜாராவுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்துள்ளனர்.

அச்சுறுத்தும் மழை

அச்சுறுத்தும் மழை

இது ஒருபுறமிருக்க இப்போட்டிக்கான வானிலை நிலவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், போட்டி தொடங்கும் முதல் நாளில், அதாவது ஆக.25 அன்று, வெயில் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் 2வது நாளில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. மழைக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. 3 வது நாளிலும் இதே வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைசி இரண்டு நாட்களில் மழை சற்று குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நான்காவது இன்னிங்ஸில் சேஸிங் அவ்வளவு சாதாரணமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளில் பேட்டிங் செய்வது லீட்ஸ்-ல் எளிதான காரியமாக இருக்காது.

வெற்றி கடினம்

வெற்றி கடினம்

இதனால் ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் + 1 ஸ்பின்னர்கள் என்ற ஃபார்முலாவுக்கு பதில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் + 2 ஸ்பின் பவுலர்கள் என்ற அணிச் சேர்க்கையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவெனில், இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் Pace மற்றும் Spin அட்டாக்கை இங்கிலாந்து எதிர்கொள்வது கடினம் என்று கூறப்படுகிறது. அந்த அணியின் ஜோ ரூட் தவிர வேறு எவரும் சிறப்பாக பேட் செய்யாததால், இந்தியாவின் பவுலிங்கை தாக்குப்பிடித்து இங்கிலாந்தால் வெற்றிப் பெறுவது கடினம் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கணிப்பாக உள்ளது.

Story first published: Monday, August 23, 2021, 16:47 [IST]
Other articles published on Aug 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+