Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தான் இதில் ஃப்ர்ஸ்ட்..கோலி முதன்முதலில் ஸ்டம்பிங்.... 4வது டி20யில் சுவாரஸ்ய புள்ளி விவரங்கள்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் யாரும் கவனிக்காத பல சுவாரஸ்ய ரெக்கார்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 2 -2 என சமநிலையில் உள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய அணியில் சூர்யகுமார், ரோகித், ஹர்த்திக் பாண்டியா, சுந்தர் ஆகியோர் யாரும் கவனிக்காத ரெக்கார்ட்களை செய்துள்ளனர்.

4வது போட்டி

4வது போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 185 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 -2 என சமநிலை அடைந்துள்ளது.

 சூர்யகுமார்

சூர்யகுமார்

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது முதல் இன்னிங்சிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். அவர் அறிமுக இன்னிங்சிலேயே அரை சதம் அடித்த 3வது வீரரானார். இதற்கு முன்னர் ரஹானே இஷான் கிஷான், ஆகியோர் எடுத்துள்ளனர். மேலும் சூர்யகுமார் அடித்த 57 ரன்களே இந்த பட்டியலில் அதிக ரன்னாகும். அதே போல உலக அளவில், சர்வதேச போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 8 வீரரானார்.

ரோகித்

ரோகித்

ரோகித் சர்மா நேற்று இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்ஸருடன் தொடங்கினார். இதனால் இன்னிங்சில் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதே போல நேற்று ரோகித் சொந்த மண்ணில் தனது 50வது சிக்ஸரை அடித்தார். சொந்த மண்ணில் 50 சிக்ஸர் அடித்த முதல் இந்திய ஆனார்.

விராட் கோலி

விராட் கோலி

நேற்றைய போட்டியில் விராட் கோலி 5 ரன்களுக்கு அடில் ரஷித் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார். சர்வதேச டி20 போட்டியில் கோலி ஸ்டம்பிங் முறையில் அவுட்டாவது இதுவே முதல் முறை. இதே போல் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை எடுத்தார். இது டி20 யில் அவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

பவுலிங்

பவுலிங்

நேற்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை மெய்டன் ஓவராக்கினார். சர்வதேச டி20யில் புவனேஷ் குமார் முதல் ஓவரே மெய்டனாக்குவது இது 3வது முறையாகும். இதே போல் வாசிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் எந்த இந்தியரும் இவ்வளவு ரன்களை விட்டதில்லை. மேலும் சுந்தருக்கும் இதுவே மோசமான பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.

Story first published: Saturday, March 20, 2021, 19:14 [IST]
Other articles published on Mar 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+