Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு?..இன்று வாழ்வா சாவா போட்டி..இந்தியாவின் ப்ளேயிங் 11 என்ன? விவரம்

அகமதாபாத்: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் இன்றைய போட்டியில் என்ன பேட்டிங் ஆர்டர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

சர்ச்சையை ஏற்படுத்திய Surya Kumar Yadav விக்கெட்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இங்கிலாந்து 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்குமான 4வது டி20 இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கும் நிலையில் அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணி 3 ஓப்பனிங் ஜோடியை முயற்சித்துள்ளது. ஆனால் அதில் ஒன்று கூட கைக்கொடுக்கவில்லை. முதல் 3 போட்டிகளிலும் ஓப்பனிங் ஆட வாய்ப்பை பெற்ற கே.எல்.ராகுல் 2 முறை டக் அவுட்டும், ஒரு முறை 1 ரன் மட்டுமே எடுத்தார். எனவே அவருக்கு 4வது போட்டியில் வாய்ப்பு குறைவு. இதனால் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

கடந்த முறை இஷான் கிஷானை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கிய கோலி, தான் 4வது வீரராக களமிறங்கினார். ஆனால் இந்த முறை இஷான் ஓப்பனிங் இறங்குவதால் கோலி தனது இடமான முதல் விக்கெட்டிற்கே களமிறங்குவார். அதே போல 3வது டி20 போட்டியில் உட்கார வைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு இந்த போட்டியில் 5வது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக ஸ்ரேயாஸ், பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா உள்ளதால் பேட்டிங் பலமாக இருக்கும்.

பவுலிங்

பவுலிங்

தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க வேண்டியிருப்பதால், இந்த முறை ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக தீபக் சஹார் களமிறங்குவார் என கூறப்படுகிறது. டெப்த் ஓவர்களில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தீபக் சஹார் நன்றாக பந்துவீசியுள்ளதால் அவர் புவனேஷ்குமாருடன் சேர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தலாம். மற்றபடி வேறு எந்த மாற்றமும் பவுலிங்கில் இல்லை என கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

இந்திய அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட், ஹர்த்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், தீபக் சஹார், புவனேஷ்குமார், யுவேந்திர சஹால் ஆகியோர் களமிறங்கலாம். இங்கிலாந்து அணியில் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், பேர்ஸ்டோ, மோர்கன், ஸ்டோக்ஸ், சாம் கரண், ஆர்ச்சர், ஜோர்டன், அடில் ரஷிட், மார்க் வுட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.

4வது டி20

4வது டி20

இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஏற்கனவே 2 -1 என முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். எனவே தொடரை வெல்ல இங்கிலாந்தும், மீண்டு வர இந்தியாவும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Thursday, March 18, 2021, 15:40 [IST]
Other articles published on Mar 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+