Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: எந்த இந்திய பவுலரும் செய்யாததை 2 முறை செய்து காட்டிய வருண் சக்கரவர்த்தி.. மெகா சாதனை

புனே: இந்திய டி20 அணியில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை வருண் சக்கரவர்த்தி செய்து காட்டி இருக்கிறார். சர்வதேச டி20 தொடர்களில் ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி வசம் தான் உள்ளது.

தற்போது மீண்டும் அந்த சாதனையை சமன் செய்து அதிர வைத்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. அவரது சாதனையை இனி ஒரு பந்துவீச்சாளர் முந்துவது கடினமே. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

IND vs ENG 4th T20 Varun Chakravarthy took most wickets in a bilateral T20I series again

முதல் போட்டியில் மூன்று விக்கெட்களையும், இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்களையும், மூன்றாவது போட்டியில் ஐந்து விக்கெட்களையும் வீழ்த்தி இருந்த வருண், நான்காவது போட்டியில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தேல் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

அவர் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 தொடர்களில் இந்திய அணிக்காக ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் முதல் இடத்திலும் அவரது மற்றும் ஒரு சாதனையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதுவே ஒரே சர்வதேச டி20 தொடரில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை ஆகும். அந்த சாதனை தென்னாப்பிரிக்க மண்ணில் படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்களை வீழ்த்தி அந்த சாதனையை சமன் செய்து இருக்கிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ள நிலையில் அந்த சாதனையை வருண் சக்கரவர்த்தி முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த பட்டியலில் அஸ்வின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 9 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரவி பிஷ்னோய் 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டி20 தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தி நான்காவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Saturday, February 1, 2025, 9:21 [IST]
Other articles published on Feb 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+