Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 4வது டி20 - சிஎஸ்கே வீரர்கள் என்றால் கம்பீருக்கு பிடிக்காதா? இந்திய அணி பிளேயிங் லெவன்

புனே : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி
பூனேவில் வரும் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 போட்டிகள்
கொண்ட இந்த தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு
போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சூழலில் தொடரை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி நான்காவது டி20
போட்டியில் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நான்காவது
போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும்.

ind vs eng suryakumar sanju samson



இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
இருக்கிறது. இந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் நல்ல
முறையில் பந்துவீசினாலும் கடைசி சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்
கொடுத்தனர். அது மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுகிறேன் என்ற
பெயரில் தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட்டுகளை இழந்து விடுகின்றனர்.

நடுவரிசையில் இருக்கும் வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்துவதில்லை. மேலும் சஞ்சு சாம்சன், இந்த தொடரில் பெரிய தாக்கத்தை
இதுவரை ஏற்படுத்தவில்லை என்பதால் அவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு
இருக்கிறது. இந்த சூழலில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருக்கும்
துருவ் ஜூரல் கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிகள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனால் அவருக்கு பதில் சிஎஸ்கே வீரர் சிவம் துபேவை சேர்க்க வேண்டும்
என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கம்பீர் அவருக்கு வாய்ப்பு
வழங்காமல் இழுத்து அடித்து வருகிறார். இதனால் சிஎஸ்கே வீரர்கள் என்றால்
கம்பீருக்கு பிடிக்காதா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதன்
காரணமாக துருவ் ஜூரல் பதில் சிவம் துபே அல்லது ரமந்திப் சிங் ஆகியோர்
சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

மூன்றாவது t20 போட்டியில் ஓய்வு பெற்றிருந்த ஆர்ஸ்தீப் நான்காவது டி20
போட்டிக்கு திரும்புவார் என தெரிகிறது. இதனால் வாஷிங்டன் சுந்தர்
அணியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. வருண் சக்கரவர்த்தி, அக்சர்
பட்டேல், ரவி பிஷ்னாய் சுழற் பந்துவீச்சுக்கு போதுமானது என்றும் கூடுதல்
ஓவர்கள் அபிஷேக் ஷர்மா திலக் வர்மா ஆகியோரிடம் இருந்து தேவைப்பட்டால்
பெற்றுக் கொள்ளலாம் என்பதால் சமி இருவருமே பிளெயிங் லெவனில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அணி உத்தேச பிளேயிங் XI : 1. சஞ்சு சாம்சன், 2, அபிஷேக் சர்மா, 3,
திலக் வர்மா, 4. சூர்யகுமார், 5, ஹர்தக் பாண்டியா, 6, துருவ் ஜூரல்/ சிவம்
துபே/ ரமன்நீப் சிங், 7, அக்சர் பட்டேல், 8, வருண் சக்ரவர்த்தி, 9, ரவி
பிஸ்னாய், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Thursday, January 30, 2025, 18:53 [IST]
Other articles published on Jan 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+