Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 4th test: இரு அணிகளுக்கும் சிக்கல்.. கடைசி 2 நாட்களில் காத்திருக்கும் சவால்

லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது போட்டிக்கான வானிலை நிலவரம் மற்றும் பிளேயிங் லெவன் குறித்து இங்கே பார்க்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வியக்க வைத்தது. அதற்கு பதிலடியாக, ஹெட்டிங்லே டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றது.

 மிரட்டலான ஃபார்ம்

மிரட்டலான ஃபார்ம்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் செப்.2ம் தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இந்தியா அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வியூகங்களை அமைத்து வருகிறது. அதேசமயம், இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது. 3வது போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது போல், ஓவல் மைதானத்திலும் ஸ்விங் தாக்குதல் நடத்த இங்கிலாந்து ரெடியாக உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போட்டி தொடங்க, இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், எக்ஸ்பெர்ட்ஸ் பலரும், தங்கள் மாதிரி பிளேயிங் லெவன் அணியில், ரஹானேவுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்துள்ளனர். சிலர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 அச்சுறுத்தும் மழை

அச்சுறுத்தும் மழை

இது ஒருபுறமிருக்க இப்போட்டிக்கான வானிலை நிலவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் மழை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டம் முழுமையாக நடைபெறுமாம். எனினும், சிறிது மழை அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போட்டியின் 5 நாட்களுக்கும் சராசரி வெப்பநிலை 19 டிகிரி செல்சியல் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

கென்னிங்டன் ஓவலில் உள்ள விக்கெட் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய நன்றாக இருக்க வேண்டும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சில உதவிகளும் புரியும். ஆனால், 3வது நாளுக்கு பிறகு ஆடுகளம் மெதுவாக இருக்குமாம். எனவே, கடைசி இரு நாட்களில் ஸ்பின்னர்கள் சிறப்பாக விளையாடலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பேட் மற்றும் பந்துக்கு இடையே மற்றொரு சீரான போட்டியை நாம் எதிர்பார்க்கலாம்.

 இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், (w), ரவீந்திர ஜடேஜா/ ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா/ ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, அஷ்வின் அணியில் இணையலாம் என்று தெரிகிறது. அதேசமயம், இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் ஷர்துல் தாகூர் இடம் பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.

 இங்கிலாந்து அணி பட்டியல்

இங்கிலாந்து அணி பட்டியல்

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மலன், ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ (w), ஓலே போப்/ டேனியல் லாரன்ஸ், மொயீன் அலி, ஓலே ராபின்சன், கிறிஸ் வோக்ஸ்/ சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன்/ மார்க் வூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் / ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியிலும் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. பட்லர் அணியில் இருந்து விலகி இருப்பதால், பேர்ஸ்டோ விக்கெட் கீப்பராக பணிபுரியவுள்ளார். இதனால், பட்லர் இடத்தில் புது வீரருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல், ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அவருக்கு பதில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்டூவர்ட் பிராட் அணியில் இணைய வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, August 31, 2021, 20:44 [IST]
Other articles published on Aug 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+