Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தமிழக வீரரும் வேண்டாம்.. நிதிஷ் குமாரும் வேண்டாம்.. டீமை மாற்ற சொன்ன வெங்க்சர்க்கார்!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் வெங்க்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டியை நீக்கிவிட்டு, வேறு இரண்டு முழு நேர பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தொடரை இழக்காமல் இருக்க, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகியுள்ளது.

IND vs ENG 4th Test Replace Washington Sundar with Kuldeep Yadav for 4th Test says Former Cricketer Dilip Vengsarkar

இந்த முக்கியமான போட்டி குறித்து ரெவ்ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் வீரரான திலீப் வெங்க்சர்க்கார், இந்திய அணியின் பந்துவீச்சுப் படையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வெங்க்சர்க்காரின் பரிந்துரைகள்:

"நான் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவை தான் அணியில் சேர்ப்பேன். நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை நீக்கிவிட்டு அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பளிக்கலாம். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்கள் தேவை. பகுதி நேர பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாது. ஆறு பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்கத் தவறினால், பந்துவீச்சாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்." என்றார் திலிப் வெங்க்சர்க்கார்.

தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். பேட்டிங்கில் பங்களிப்பார் என்பதற்காக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய முழு நேர பந்துவீச்சாளரே அணிக்கு அவசியம் என்பது வெங்க்சர்க்காரின் கருத்தாக உள்ளது.

அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை, நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக களமிறக்க வேண்டும் என்றார். "அர்ஷ்தீப் ஒரு சிறந்த இடது கை பந்துவீச்சாளர். இங்கிலாந்து ஆடுகளச் சூழலுக்கு ஏற்ப பந்தை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். அவரால் ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்ய முடியும், அது மிகவும் முக்கியம். அவர் பந்துவீசுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று வெங்க்சர்க்கார் குறிப்பிட்டார்.

Story first published: Friday, July 18, 2025, 10:57 [IST]
Other articles published on Jul 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+