1000மாவது டெஸ்ட்.. ஒரு தோல்வி.. ஒரு வெற்றி.. பல சாதனைகள்!
பர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சில குறிப்பிடத்தகுந்த சாதனைகளை செய்துள்ளனர். அதன் விவரம்

ஜோ ரூட் :
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்துள்ளார். மிக குறைந்த நாட்களில் 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பென் ஸ்டோக்ஸ் :
இங்கிலாந்து அணியின் ஆல் ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2500+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் வீழ்த்திய நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சாம் கர்ரன்:
மிக குறைந்த வயதில் 4 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர். மிக குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அஸ்வின் :
அஸ்வின் இந்த போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கெதிராக இது இரண்டாவது சிறந்த பந்து வீச்சு ஆகும். மேலும் இங்கிலாந்தில் முதல் நாளில் 4 விக்கெட்களை முதல் இந்திய சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார்.

விராட் கோஹ்லி :
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது முதல் சதத்தை இங்கிலாந்தில் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அணியின் மொத்த ரன்களில் 45.87% ரன்களை இவர் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications