IND vs ENG: இதான் ஓபனிங்.. 10 சிக்ஸ்.. 37 பந்துகள்.. செஞ்சுரி.. இங்கிலாந்தை கதற விட்ட அபிஷேக் சர்மா
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிகள் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடி தெறிக்க விட்டுள்ளார். அவர் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 10 சிக்ஸ் மற்றும் 5 ஃபோர் அடித்து 11வது ஓவரிலேயே சதத்தை நிறைவு செய்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அது அந்த அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா சதம் அடித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார்.
Story first published: Sunday, February 2, 2025, 19:59 [IST]
Other articles published on Feb 2, 2025


Click it and Unblock the Notifications