Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இன்னும் 4 விக்கெட் தான்.. பிரம்மாண்ட உலக சாதனை படைக்கப் போகும் வருண் சக்கரவர்த்தி

மும்பை: இந்திய டி20 அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக மாறி இருக்கும் வருண் சக்கரவர்த்தி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் மாபெரும் உலக சாதனையை படைப்பார். அவர் ஏற்கனவே இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தி இருப்பதால் ஐந்தாவது போட்டியிலும் அவர் அதிக விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

அதனால் இந்த உலக சாதனையையும் வருண் சக்கரவர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் வருண் சக்கரவர்த்தி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் 3, 2, 5 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதுவரை 12 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஒரே டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

ind vs eng india varun chakravarthy

முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அப்போதே ஒரே டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து விட்டார். தற்போது ஐந்தாவது டி20 போட்டியில் விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் அந்த சாதனையை முறியடிப்பார்.

உலக அளவில் ஒரே டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் வசம் உள்ளது. அவர் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

தற்போது இங்கிலாந்து தொடரில் நான்கு போட்டிகளில் 12 விக்கெட் வீழ்த்தியிருக்கும் வருண் சக்கரவர்த்தி ஐந்தாவது போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தத் தொடரில் மொத்தம் 16 விக்கெட்களை வீழ்த்தி இருப்பார். அதன் மூலம் ஜேசன் ஹோல்டரின் உலக சாதனையை வருண் முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் -

ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்): 15 vs இங்கிலாந்து (2022)

சமி சொஹைல் (மலாவி): 14 vs மொசாம்பிக் (2019)

இஷ் சோதி (நியூசிலாந்து): 13 vs ஆஸ்திரேலியா (2021)

சார்லஸ் ஹின்ஸ் (ஜப்பான்): 13 vs மங்கோலியா (2024)

வருண் சக்கரவர்த்தி (இந்தியா): 12 vs இங்கிலாந்து (2025)*

வருண் சக்கரவர்த்தி (இந்தியா): 12 vs தென்னாப்பிரிக்கா 2024)

பிரதிக் சிங் பைஸ் (மெக்சிகோ): 12 vs கோஸ்டா ரிகா (2024)

சந்தீப் லமிச்சேன் (நேபாளம்): 12 vs கென்யா (2022)

ஹைடன் வால்ஷ் (மேற்கிந்திய தீவுகள்): 12 vs ஆஸ்திரேலியா (2021)

Story first published: Sunday, February 2, 2025, 11:29 [IST]
Other articles published on Feb 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+