Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிவம் துபே உலக சாதனை.. எந்த கிரிக்கெட் வீரராலும் தொட முடியாத டி20 சாதனை.. இந்தியாவுக்கு 30 வெற்றிகள்

மும்பை: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் முடிவில் ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தார். டி20 போட்டிகளில் தொடர்ந்து 30 வெற்றிகளைப் பெற்ற உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பட்டை தீட்டப்பட்ட 31 வயதான சிவம் துபே, 2019 நவம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

ind vs eng india shivam dube

அவரது முதல் போட்டியில், இந்தியா மஹ்முதுல்லா தலைமையிலான வங்கதேச அணிக்கு எதிராக அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அவரது ஐந்தாவது டி20 போட்டியில், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் வங்கதேசத்திடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், அதன் பிறகு, சிவம் துபே இடம்பெற்ற எந்த டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடையவில்லை.

2020 ஜனவரியில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த இந்திய அணியில் சிவம் துபேவும் இடம் பெற்று இருந்தார். அந்த ஐந்து போட்டிகளிலும் அவர் விளையாடினார். 2024 இல் 15 டி20 போட்டிகளில் துபே விளையாடினார். இதில் டி20 உலகக் கோப்பையில் எட்டு போட்டிகள் அடங்கும். துபே இடம் பெற்ற அந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் அவர் ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், மூன்றாவது போட்டிக்கு முன்னதாக நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் சேர்க்கப்பட்டார். சிவம் துபே இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐந்தாவது டி20 போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

துபேவின் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் திங்களன்று ஒரு பதிவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டியது. "துபே விளையாடினால், இந்தியா வெற்றி பெறும். 30-0 மற்றும் இன்னும் வலுவாகிக் கொண்டே செல்கிறது," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிற்காக 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் சிவம் துபே 26 முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். நான்கு அரை சதங்கள் உட்பட மொத்தம் 531 ரன்கள் குவித்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்ததே இந்திய அணிக்கான அவரது சிறந்த ஸ்கோர் ஆகும்.

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 24 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் சிவம் துபே. 2019 ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நான்கு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

Story first published: Tuesday, February 4, 2025, 15:20 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+