Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 5வது டெஸ்ட் எப்போதோ முடிஞ்சிடுச்சி.. இங்கிலாந்து தான் வெற்றி பெறும்- இங்கி. வீரர் கருத்து

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி உச்சகட்ட பரபரப்பான நிலையில் இருக்கின்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் தான் தேவைப்படுகிறது.

ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது? கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை என்றால் மூன்று விக்கெட்டுகளே போதுமானது. இதனால் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ind vs Eng

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனாகிவிடும். இதனால் எப்படியாவது வெற்றி பெற்று தொடரை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மித் களத்தில் நிற்பது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வெல்லும் என கணிப்பு:

எனினும் சிராஜ்,பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் உள்ளது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் ஆத்தர்ட்டன்,இந்த போட்டி எப்போதோ முடிந்து விட்டது.

இதில் இங்கிலாந்து தான் வெற்றி பெறும். இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே மிகச் சிறந்த தொடராக அமைந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டபோது, ஹாரி புரூக் அபாரமாக கவுண்டர் அட்டாக்கிங் இன்னிங்ஸ் விளையாடினார்.

இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படும்:

இதுபோன்று ஜோ ரூட்டும் நல்ல இன்னிங்சை வெளிப்படுத்தினார். இதன் மூலம் தற்போது வெற்றி வாய்ப்பு இங்கிலாந்துக்கு சாதகமாக மாறி இருக்கிறது என்று மைக்கேல் ஆத்தர்ட்டன் தெரிவித்துள்ளார். ஒருவேளை இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வென்றால் தொடர் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் மாறிவிடும். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும்.

Story first published: Monday, August 4, 2025, 12:12 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+