Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்தின் 10 இல்ல 9 விக்கெட் எடுத்தாலே போதும்.. விவரம்

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெறுவதற்காக இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் கடுமையாக மோதி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்து விடும்.

மாறாக இங்கிலாந்து அணி வெற்றியோ இல்லை டிராவோ அடைந்தார். தொடரை அந்த அணி கைப்பற்றி விடும். ஆனால் தற்போது தான் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் நிச்சயம் போட்டி மழை பாதிப்பு இல்லாமல் இருந்தால் சமன் ஆகாது.

Chris woakes

இந்த தருணத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக தொட்டுவிடும்.

ஆனால் நல்வாய்ப்பாக இந்திய அணி இங்கிலாந்தில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினாலே வெற்றியைப் பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிறிஷ் வொக்ஸ்க்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார்.

அவர் பந்து வீசவும் வரவில்லை. பேட்டிங் செய்யவும் வரவில்லை. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங் செய்ய வர மாட்டார் என்பதால் இங்கிலாந்து அணியின் 9 விக்கெட்டுகளை எடுத்தாலே இந்தியா வெற்றி பெற்று விடும். 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது கிறிஸ் வொக்ஸ்க்கு ஒரு கை தோள்பட்டை உடைந்துள்ளது, ஆனால் தேவைப்பட்டால் ஒற்றை கையுடன் வந்து விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நேற்று மைதானத்தில் இங்கிலாந்து டெஸ்ட் ஜெர்சி மற்றும் ஒரு கையில் கட்டு போட்டு நின்று கொண்டு இருந்தார். இதனால், அதிலும் ஒரு டிராமா 5வது நாளில் நடக்கலாம்.

Story first published: Sunday, August 3, 2025, 17:43 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+