Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: தயவு செய்து இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க.. இந்திய அணிக்கு பத்ரிநாத் கோரிக்கை

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா சிறப்பாகச் செயல்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் ஆதரவு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஆறு இன்னிங்ஸ்களில் 100 ரன்களுக்கும் குறைவாகவும், 14-க்கும் குறைவான சராசரியுடனும் அவர் மோசமான ஃபார்மில் உள்ளார்.

இருப்பினும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அபிஷேக் அசத்தினார். இந்த அதிரடி ஆட்டமே அவருக்கு நல்ல மனநிலையை அளித்து, இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபார்ம் இழந்த வருண் சக்கரவர்த்தியையும் பிளேயிங் 11-ல் தக்கவைக்க பத்ரிநாத் வலியுறுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், "இந்திய அணிக்கு எனது பரிந்துரை, அணியில் மாற்றங்கள் வேண்டாம் என்பதே. அபிஷேக் வாங்கடே மைதானத்தில் சிறப்பாகச் செயல்படுவார். அது சிக்ஸர்கள் பறக்கும் மைதானம்" எனக் குறிப்பிட்டார்.

"இந்தத் தொடர் முன்னேற்றத்தில் வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணம் என்பதால், அவரையும் தொடர்ந்து நம்ப வேண்டும். எனவே, பிளேயிங் 11-ல் எவ்வித மாற்றத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை" என்று பத்ரிநாத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"அபிஷேக்கை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கைச் சேர்ப்பது, இஷான் கிஷன், சஞ்சு சாம்சனைத் தொடக்க வீரர்களாகக் களமிறக்குவது போன்ற பேச்சுக்களை கேட்கிறேன். வருண் சக்கரவர்த்திக்கு பதில் குல்தீப் யாதவைச் சேர்ப்பது பற்றியும் பேசுகின்றனர். வான்கடேவில் லேக் ஸ்ப்பினர் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பதும் இந்த மாற்றத்திற்கான காரணம்" என்றும் அவர் விளக்கினார்.

வருண் இத்தொடரைச் சிறப்பாகத் தொடங்கினாலும், கடைசி மூன்று ஆட்டங்களில் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து, 10-க்கும் அதிகமான எக்கனாமி விகிதத்தில் ரன்களை வாரி வழங்கியுள்ளார். அவரது இந்தச் சரிவு அணிக்குக் கவலையளித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா சிறந்த டி20ஐ சாதனையை வைத்துள்ளார். 25 வயதான அவர், தனது சர்வதேச வாழ்க்கையில், ஐந்து போட்டிகளில் 279 ரன்கள் அடித்துள்ளர். அவருடைய சராசரி 55.80, ஸ்ட்ரைக் ரேட் 220 எடுத்து மிரட்டியுள்ளார்.

பந்துவீச்சிலும் அபிஷேக் இங்கிலாந்துக்கு எதிராகத் திறம்பட செயல்பட்டுள்ளார். தனது ஆறு டி20ஐ விக்கெட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை இவர்களுக்கு எதிராகவே வந்தன. கடந்த ஆண்டு மும்பையில் 2/3 என்ற சிறந்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்த இவரால், 2022 டி20 உலகக் கோப்பை சாம்பியன்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் காத்திருக்கிறது.இந்தியா - இங்கிலாந்து போட்டியில் வெல்லும் அணி, மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுவார்கள்.

Story first published: Thursday, March 5, 2026, 16:50 [IST]
Other articles published on Mar 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+