Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: அபிஷேக் சர்மா செய்த மெகா சொதப்பல்.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல

ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதனால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை எடுத்து அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

india vs england abhishek sharma suryakumar sanju samson

இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆட முற்பட்டு ரன்களை சேர்த்தார். ஆனால் மறுமுனையில் சஞ்சு சாம்சன் மூன்று ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து சூரிய குமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார். பவர் பிளேவில் விக்கெட் சென்றால் கொஞ்சம் பொறுமை காத்து ரன்களை சேர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் எவ்வளவு இலக்கை துரத்த போகிறோம் என்று நமக்கு ஏற்கனவே தெரியும். இதனால் தொடக்க வீரர்கள் கடைசிவரை களத்தில் நின்று ரன்களை சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள்.

இப்படி இருக்கும் போது தேவையில்லாத ரிஸ்க்கான ஷாட்டுகளை ஆட மாட்டார்கள். ஆனால் அபிஷேக் சர்மா தொடர்ந்து ரன்களை சேர்க்க வேண்டும் என்ற வெறியில் விளையாடினார். அது தவறாக போய் முடிந்தது. 14 பந்துகளில் 5 பௌண்டரிகள் என 24 ரன்கள் சேர்த்த அபிஷேக் ஷர்மா தேவையில்லாத ஒரு ஷார்ட் அடி ஆட்டம் இழந்தார். அபிஷேக் ஷர்மா மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடி பத்து ஓவர் வரை நின்று இருந்தால் நிச்சயம் இந்திய அணி ஒரு நல்ல நிலையை எட்டி இருக்கும். அபிஷேக் ஷர்மா செய்த இந்த சொதப்பல் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.

Story first published: Tuesday, January 28, 2025, 22:23 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+