Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபிஷேக் சர்மாவின் அதிரடி வருகை.. இனி இந்த 2 வீரர்களும் இந்திய டி20 அணி பக்கமே வர முடியாது

மும்பை : ஐபிஎல் தொடர் வருகைக்குப் பிறகு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் கொட்டி கிடக்கிறார்கள். கிரிக்கெட்டில் பலர் சாதித்தும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வகையில் டி20 அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது அபிஷேக் ஷர்மா என ஒரு இளம் வீரர் அடித்த அடி பல வீரர்களுக்கு இனி வாய்ப்பு கிடைக்காத சூழலை உருவாக்கி இருக்கிறது.அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ind vs eng suryakumar yadav abhishek sharma

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக இடம் பிடிக்கும் கில், டி20 கிரிக்கெட்டிலும் ஜிம்பாப்வே தொடரில் எல்லாம் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் இதில் நன்றாக விளையாடினாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
இந்த சூழலில் கில்லுக்கு டி20 அணியில் இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால் தற்போது அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து சாதனை படைத்திருப்பதால், இனி கில் டி20 கிரிக்கெட் பக்கமே வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஏற்கனவே சாம்சன், அபிஷேக் ஷர்மா,ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் டி20 அணியில் டாப் ஆர்டர் இடத்தில் உள்ளனர். இதனால் கில்லுக்கான கதவு அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் கில்லை விட மிகவும் பாவமான வீரர் என்றால் அது ருதுராஜ் தான். ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் உருவெடுத்து இருக்கிறார்.தமக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் ருதுராஜ்க்கு இந்திய ஒரு நாள் அணியிலும் வாய்ப்பு தரப்படவில்லை. டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு தரப்படவில்லை.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் தான் அவருக்கு விளையாட இடம் இருந்தது.தற்போது அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி வருவதன் மூலம் இனி ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் தற்போது டாப் வரிசையில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா திலக்கு வர்மா,சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் இவர்களை தாண்டி கில் மற்றும் ருதுராஜ் இனி வாய்ப்பு கிடைத்தது சந்தேகம் தான். ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதில் இசான் கிஷன் அல்லது ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 4, 2025, 9:00 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+