IND vs ENG: அதிவேக சதம் அடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மா மொரட்டு சதம்.. 247 ரன்கள் குவிப்பு
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து இருக்கிறது.
இந்த தொடரை ஏற்கனவே இந்திய அணி வென்ற நிலையில் ஐந்தாவது டி20 போட்டி சமிபிரதாய ஆட்டமாக தான் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் முதலில் பேட்டிங் செய்ய இருந்த இந்திய அணி பெரிய இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்தில் சிக்சர் அடித்து பட்டையை கிளப்பினார். முதல் ஓவரில் சாம்சன், இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என மொத்தம் 16 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் அபிஷேக் ஷர்மா மும்பை மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை சிக்சர் பவுண்டரி என அவர் விரட்டினார். இதனால் ரன்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் வெளியேற அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஜோடி அபாரமாக விளையாடி ரன்கனை சேர்த்தது.
திலக் வர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் இரண்டு ரன்களில் வெளியேறினார். இதே போன்று சிவம் துபே 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுபுறம் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். கம்ப்யூட்டர் வீடியோ கேம் இல் பேட்ஸ்மேன்கள் ஈசியாக சிக்சர் அடிப்பது போல் அபிஷேக் ஷர்மா இந்த ஆட்டத்தில் 13 சிக்சர்களை விளாசினார்.இதில் ஏழு பவுண்டரிகளும் அடங்கும். இதனால் 37 பந்துகளில் அபிஷேக் ஷர்மா சதத்தை விளாசினார்.
ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும் ரிங்கு சிங் 9 ரன்களிலும் அக்சர் பட்டேல் 15 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 54 பந்துகளை எதிர் கொண்ட அபிஷேக் ஷர்மா 135 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்தார் .
20 ஓவர் முடிவில் இந்திய அணி 243 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 100 ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்தது. ஏற்கனவே வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி 7 ஒரு ஓவரில் 100 ரன்கள் எட்டிய நிலையில் தற்போது இந்திய அணி 6.3 ஓவர்கள் எல்லாம் நூறு ரன்களை எட்டி சாதித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications