IND vs ENG: இந்திய அணி முதுகில் குத்திய அபிஷேக் சர்மா.. சாம்சனுக்கு லைஃப் கொடுத்த இங்கிலாந்து
மும்பை: டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கினர். மேலும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சேஸிங்கிற்கு ஏதுவாக இருக்கும்.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்ட வேண்டும் என்ற நோக்கில் விளையாடினர். எனினும் இந்த தொடர் முழுவதும் தடுமாறி வந்த அபிஷேக் ஷர்மா அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசி இருந்தார்.
இதனால் அபிஷேக் ஷர்மா மீது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால் அவர் வழக்கம் போல் ஒரு சுழற் பந்துவீச்சாளர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் இரண்டு பவுண்டரிகள் அடித்து ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் இஷான் கிஷன் களத்திற்கு வந்தார்.
எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் ரன்களை சேர்த்த நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என அவர் பட்டையை கிளப்பினார். இந்த தருணத்தில் போட்டியில் இரண்டு புள்ளி இரண்டாவது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் சாம்சன் மிட் ஆன் திசை நோக்கி ஒரு ஷாட் ஆடினார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிடம் பந்து சென்றது.எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் கேட்ச்சை தவறவிட சாம்சனுக்கு ஒரு லைப் கிடைத்தது.இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications