Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20,30 பந்துகளை பிடித்தாலே போதும்.. ஆட்டம் மாறிவிடும்.. குட்டி யுவராஜை பாராட்டிய பியூஸ் சாவ்லா

கொல்கத்தா : சர்வதேச t20 கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மா தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக தன்னுடைய இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்தார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.

இதில் எட்டு சிக்சர்கள் அடங்கும். அதுமட்டுமில்லாமல் அபிஷேக்சர்மாவுக்கு சுழற் பந்துவீச்சும் வீச தெரியும். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவுக்கு நீண்ட வாய்ப்பை இந்திய அணியில் வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

ind vs eng abhishek sharma suryakumar

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் அபிஷேக் ஷர்மா ரிஸ்க் எடுத்து விளையாடக்கூடிய வீரர். அவர் ரன்களை அடிக்க தொடங்கினால் நிச்சயம் போட்டியில் வெல்லும் அளவுக்கு அது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆக இருக்கும். அபிஷேக் ஷர்மாவிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அவர் 60 ரன்கள் அடித்தால் அதை 20 முதல் 22 பந்திலே அடித்து விடுவார் .

எனவே இது போன்ற வீரர்களுக்கு நீங்கள் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். நேற்றைய முதல் டி20 போட்டியில் கூட அவர் மெதுவாக ஆரம்பித்தார். ஆனால் 20 பந்துகளில் எல்லாம் அரை சதத்தை கடந்து விட்டார். எனவே அவரிடம் எந்த அளவுக்கு ஷார்ட் ஆடும் தரம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

எனவே அவரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல், அபிஷேக் ஷர்மா அணியில் இருந்த போது அவருடைய இடம் குறித்து கேள்விக்குறி எப்போதுமே இருந்தது. அவர் நல்ல பார்மில் கூட இல்லை.
ஆனால் இன்று தன்னுடைய திறனை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு சார்ட் பால் வீசாமல் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கின்றேன். அவர் பெரிய ஸ்கோரை இதற்கு முன்பு அடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய கேம் பிளானில் தொடர்ந்து நம்பி ரன்களை சேர்த்து இருக்கிறார். இப்படித்தான் அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வெற்றியை கண்டார். சில பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்கவில்லை என்றால் திடீரென்று தன்னுடைய ஆட்டத்தின் ஸ்டைலையே மாற்றி விடுவார்கள். அதன் பிறகு 30, 40 ரன்கள் மெதுவாக எடுக்க முயற்சி செய்வார்கள்ம்ஆனால் அபிஷேக் ஷர்மா அப்படி செய்யவில்லை. இது நிச்சயம் ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 23, 2025, 20:52 [IST]
Other articles published on Jan 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+