Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: உன்னால என்ன பண்ண முடியுமோ, அதை செஞ்சிட்ட.. சஞ்சு சாம்சனால் ஏமாந்த அபிஷேக் சர்மா

சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. குறிப்பாக கொல்கத்தா டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிசேக் சர்மா 20 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் அபிசேக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

ind vs eng abhishek sharma sanju samson

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 45 ரன்களும், கர்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இதில் அபிஷேக் ஷர்மா முதல் ஓவரில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார்.இதனை அடுத்து மார்க் வுட் வீசிய ஓவரில் அபிஷேக் ஷர்மா எல் பி டபிள்யூ ஆனார்.

ஆனால் சென்னை ஆடுகளத்தில் பவுல்ஸ் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்யும் என்ற குழப்பம் அபிஷேக் சர்மாவுக்கு இருந்தது. எனினும் டிஆர்எஸ் உதவியை அவர் நாடாமல் எதிரில் இருந்த சீனியரான சஞ்சு சாம்சனிடம் இது குறித்து விவாதித்தார். தாம் டிஆர்எஸ் முடிவை எடுக்கவா இல்லை பெவிலியன் செல்லவா என்று அவர் கேட்டார்.

இதற்கு சாம்சன் இல்லை நீங்கள் டிஆர்எஸ் எடுத்து பாருங்கள் என உறுதியாக கூறினார். இதை அடுத்து சஞ்சு சாம்சனை நம்பி அபிஷேக் ஷர்மா டி ஆர் எஸ் எடுத்தார். ஆனால் நடுவரின் ரிப்ளேவில் பந்து ஸ்டெம்பில் பட்டிருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து அபிஷேக் ஷர்மா அவுட் என அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே ஒரு டிஆர்எஸ்ஐ இழந்தது. பொதுவாக பேட்ஸ்மேன்கள் எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் இடம் டிஆர்எஸ் எடுப்பது குறித்து விவாதிப்பார்கள். இந்த தருணத்தில் சஞ்சு சாம்சன் தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரசிகர்கள் சிலர் உங்களை நம்பி கேட்டதற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டீங்க என சத்யராஜ் வடிவேலு காமெடி போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இதேபோன்று சஞ்சு சாம்சனும் ஐந்து ரன்கள் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவும் 12 ரன்களில் வெளியேறினார்.

Story first published: Saturday, January 25, 2025, 21:54 [IST]
Other articles published on Jan 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+