லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கின்றார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
ஆனால் இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரில் முன்னிலை பெற்று இருப்பதால், அந்த அணி டிரா செய்தாலே போதுமானது. இந்த நிலையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்த தருணத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. புதிய பந்து ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் இங்கிலாந்து வீரர்களும் கடும் நெருக்கடியை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஜாக் கிராலி ஆகியோர் ஏதோ டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போல் ரன்களை சேர்த்தார்கள்.
டெஸ்டி கிரிக்கெட்டுக்கு என்ற உரிய ஆட்டத்தை அவர்கள் கொஞ்சம் கூட ஆடவில்லை. இந்திய வீரர்களின் பந்துவீச்சை மதிக்காமல் கண்களை மூடிக்கொண்டு சுற்றினார்கள். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. பேஸ் பால் ஆட்டத்தை ஆடிய இங்கிலாந்த அணி முதல் விக்கெடுக்கு 92 ரன்கள் சேர்த்தது.
குறிப்பாக பென் டக்க்ட் 38 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இந்த கட்டத்தில் தான் பென் டக்கட் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பது போல் தேவையில்லாமல் பின்னால் திரும்பி ஒரு ஷாட் ஆடினார். ஆனால் அந்த பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் கையில் விழுந்தது.
இதை அடுத்து இன்று விக்கெட்டை கொண்டாடிய ஆகாஷ் தீப் நேரடியாக தோள்பட்டையில் கையில் போட்டு இந்த வேலையெல்லாம் வேற யார் கிட்டயாவது வச்சுக்கோ என்பது போல் சிரித்துக் கொண்டே பேசினார். இதனால் முகம் நொந்து போய் பென் டக்கட் களத்தை விட்டு வெளியேறினார். இந்த விக்கெட் இந்தியா மீண்டும் ஆட்டத்திற்குள் வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.