Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: தொடர் முடிந்து 4 நாள் ஆச்சு.. இன்னும் அழுகும் இங்கிலாந்து.. தடை விதிக்கனும் என பேச்சு

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டி முடிவடைந்து நான்கு நாட்கள் ஆகியும் இங்கிலாந்து அணியால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

இதனால் இந்தியா குறித்து பல்வேறு கருத்துக்களை அவர்கள் இன்னும் கூறி வருகின்றனர். குறிப்பாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டக்கட்டை வீழ்த்திய பின் ஆகாஷ் தீப் அவருடைய தோள்பட்டையில் கையை போட்டு பேசி விட்டு சென்றார்.

Ind vs Eng

பேட்டிங் போது," உன்னால் என்னை ஆட்டம் இழக்க வைக்க முடியாது" என பென்டக்கட் கூறியதற்கு தான் ஆகாஷ் தீப் இவ்வாறு செய்தார். என்னும் ஆகாஷ் தீப்பின் இந்த பேச்சுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். "இதுவே தான் அந்த இடத்தில் இருந்தால் ஆகாஷ் தீப் முகத்தில் குத்தி இருப்பேன்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பென் டக்கட் சிறுவயது பயிற்சியாளர் ஆன ஜேம்ஸ் நாட் அளித்துள்ள பேட்டியில் ஆகாஷ் தீப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் கடும் சவாலாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை நாம் ஊக்குவிக்க கூடாது."

"இளைஞர்கள் இதுபோல் செய்யக்கூடாது என்று நினைத்தால் உடனடியாக ஆகாஷ் தீப் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஆகாஷ் தீப் செய்தது என்னை பாதிக்கவில்லை. களத்தில் எப்போதுமே பென் டக்கட் கடும் சவாலை கொடுப்பார். இந்த டெஸ்ட் தொடரிலே பார்த்திருக்கலாம்."

"கில் கூட பென் டக்கட் களத்தில் இருக்கும் போது நான் அதை என்ஜாய் செய்கிறேன் என்று கூறியிருந்தார். டக்கட் உயரம் குறைவாக இருந்தாலும் அவர் மைதானத்தின் நாலா பக்கமும் அடிக்கக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிறார். மற்ற வீரர்களை காட்டிலும் டக்கட் கொஞ்சம் வித்தியாசமானவர். கில் எடுத்துக் கொண்டால் அவர் கிரிக்கெட்டுக்கு உரிய பாரம்பரிய ஷாட்களை ஆடும் வீரர் ஆவார்."

"நான் சிறு வயதில் டக்கட்டை முதன் முதலில் பார்க்கும் போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் ஷாட் உள்ளிட்ட ஷாட்டுக்ளை ஆடினார். அவருக்கு நான் சில கிரிக்கெட்டின் தத்ரூபமான ஷாட்களை சொல்லிக் கொடுத்தேன். சிறு வயதிலிருந்து டக்கட் பந்துகளை அடித்து ஆடும் வல்லமையை பெற்றிருந்தார்" என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ஜேம்ஸ் நாட் கூறியுள்ளார்.

Story first published: Friday, August 8, 2025, 23:32 [IST]
Other articles published on Aug 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+