Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்தை சுளுக்கு எடுத்த நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்.. 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நைட் வாட்ச்மேன் ஆக களமிறங்கிய பவுலர் ஆகாஷ் தீப் அரை சதம் அடித்து ரசிகர்களை குதூகலம் படித்திருக்கின்றார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை இந்திய அணியால் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

Akash Deep

ராகுல் 7 ரன்களிலும், சாய் சுதர்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஜெய்ஸ்வால் களத்தில் நின்ற போது மேலும் விக்கெட்டுகள் விழாமல் இருப்பதை தடுக்க பவுலர் ஒருவரை அனுப்புவார்கள். இப்படி வரும் வீரர்களை நைட் வாட்ச்மேன் என்று அழைப்பார்கள். அப்படி களத்திற்கு வரும் பவுலர்கள் அன்றைய நாள் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நாள் முடிந்தால் பந்தை கொஞ்சம் பழையதாக்க வேண்டும்.
இதுதான் அவர்களுடைய பணி. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஆகாஷ் தீப் பட்டையை கிளப்பினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை பவுண்டரிகளாக அடித்து நொறுக்கிய அவர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தார். இதனை கொஞ்சம் கூட இங்கிலாந்து வீரர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவருடைய விக்கெட்டை வீழ்த்த கடுமையாக போராடினர்.ஆனால் ஆகாஷ் தீப் பவுண்டரிகளாக அடித்தார். இதன் மூலம் ஆகாஷ் தீப் 70 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆகாஷ் அதிரடி காட்ட 94 பந்துகளில் அவர் 66 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மூன்றாவது விக்கெட்டுக்கு 107 ரன்களை ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் ஜோடி சேர்த்தது.

இது இந்திய அணியின் இன்னிங்சை பலப்படுத்தியது.ஆகாஷ் தீப் ஆட்டம் இழந்து பெவிலியன் சென்றபோது ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். இதன் மூலம் நைட் வாட்ச்மேன் ஆக இந்திய டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆகாஷ் தீப் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

Story first published: Saturday, August 2, 2025, 17:48 [IST]
Other articles published on Aug 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+