Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஒரே ஓவரில் 15 ரன்கள் எடுத்த ஹாரி புரூக்.. அடுத்த ஓவரில் பழிவாங்கிய ஆகாஷ் தீப்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவிச்சாளர் ஆகாஷ் தீப் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும். இந்த தருணத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுக்க, அதே ஸ்கோரை இந்திய அணியும் எடுத்து சமன் செய்தது.

Akash deep vs Harry brook

இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியினர் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஜாக் கிராலி, டக்கட், போப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 50 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

அப்போது களத்தில் நின்ற ஹாரி புரூக் அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தார். புரூக் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை தனது பேட்டிங் மூலம் கவர்ந்து சென்று விடுவார் என இந்திய ரசிகர்களும் பயந்தனர். இந்த தருணத்தில் ஆகாஷ் தீப் வீசிய ஓவரில் ஹாரி புரூக் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார்.

அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் சென்றது/ அதிலும் ஹாரி புரூக் அடித்த விதம் இங்கிலாந்து அணி அதிரடியை காட்டப் போகிறது என்ற பயத்தை இந்திய வீரர்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் ஹாரி புரூக் மீண்டும் இங்கிலாந்துக்காக ஒரு முக்கிய இன்னிங்ஸை ஆடப் போகிறார் என்ற அச்சத்தில் இந்திய அணி வீரர்கள் இருந்தனர். அப்போது மீண்டும் ஆகாஷ் தீப பந்து வீச வந்தார்.

இந்த ஓவரில் என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,ஹாரி புரூக்கை கிளீன் போல்ட் செய்து ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஆகாஷ் தீப் ஏற்படுத்தினார். இதனால் ஹாரி புரூக் 19 பந்துகளில் நான்கு பவுண்டரிஒரு சிஸ்கருடன் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதற்கு முதல் ஓவரில் ஆகாஷ் தீப் ஹாரி புரூக் 16 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் அவருடைய விக்கெட் வீழ்த்தி பழிதீர்த்து கொண்டார்.

Story first published: Sunday, July 13, 2025, 20:23 [IST]
Other articles published on Jul 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+