மான்செஸ்டர்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பல விறுவிறுப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நாளை மான்செஸ்டர் நகரில் தொடங்க இருக்கின்றது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை
பெற்றுள்ளது.
இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை உயிரப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. இந்த தருணத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தற்போது மிகப்பெரிய தலைவலியில் பயிற்சியாளர் கம்பீர் சிக்கி இருக்கின்றார்.

தற்போது நடைபெற்று வரும் அண்டர்சன் டெண்டுல்கர் தொடரில் மூன்று போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக அவர் 425 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். இதில் அவருடைய சராசரி 70 என்று அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 78 என்ற அளவிலும் இருக்கின்றது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விக்கெட் கீப்பிங் பணியை செய்து கொண்டிருந்த போது ரிஷப் பண்ட்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்தார். விக்கெட் கீப்பிங் பணியை துருவ ஜுரல் செய்திருந்தார். அந்த போட்டியில் பண்ட் முதல் இன்னிங்ஸில் 74 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்களும் எடுத்திருந்தனர்.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் ஒன்பது நாட்கள் இடைவெளி இருந்தது. இந்த காலத்தில் பண்டின் காயம் சரியாகி இருக்கும் என்று ரசிகர்கள் நம்பினர். இந்த தருணத்தில் பண்ட் தற்போது மான்செஸ்டர் போட்டிக்காக தயாராகும் விதமாக விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
எனினும் அவர் 100 சதவீதம் முழு உடல் தகுதியை எட்டிருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பண்டை வெறும் பேட்ஸ்மேனாக சேர்க்கலாம் என்ற யோசனை இருக்கின்றது. ஆனால் கையில் காயம் ஏற்பட்டிருக்கும் ஒருவர் எவ்வாறு களத்தில் கிளவுஸ் இல்லாமல் பில்டிங் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது பண்ட்க்கு ஏற்கனவே காயம் அடைந்து விட்டது என தெரிய வந்திருப்பதால் அவருக்கு மாற்று வீரரை கூட விக்கெட் கீப்பிங செய்ய இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது.
ஒருவேளை பண்ட் வெறும் பேட்ஸ்மேனாக இந்த போட்டியில் விளையாடினால் அவருக்கு பதில் துருவ் ஜூரலை அணியில் சேர்க்க வேண்டியதாகி இருக்கும்.அப்படி இருக்கும் போது துருவ் ஜுரல் எந்த இடத்தில் யாருக்கு பதில் களம் இறங்குவார் என்று குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக கருண் நாயர் இடத்தை வழங்கலாமா
? இல்லை கீழ் வரிசையில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கம்பீர் முழித்துக் கொண்டு இருக்கின்றார்.