Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்துக்கு காத்திருக்கும் ஆப்பு.. 5வது டெஸ்டில் அறிமுகமாகும் இந்தியாவின் டி20 கிங்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது பந்துவீச்சு படையை மாற்றி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விளையாடப்படவில்லை.

இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். மாற்று வீரராக சிஎஸ்கே வின் அன்சூல் காம்போஜ் விளையாடினார். எனினும் மான்செஸ்டர் ஆடுகளம் மிகவும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் பந்துவீச்சு ஈடுபடவில்லை.

Ind vs Eng

இந்த தருணத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சு படை எவ்வாறு இருக்கும். சிராஜ், பும்ரா ஆகியோர் விளையாடுவார்களா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் காயமடைந்த வீரர்களுக்கு என்ன ஆனது என்ற பல கேள்வி இருந்தது. இந்த நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆன ஆர்ஸ்தீப் சிங் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக விளங்கி வருகின்றார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராகிக் கொண்டிருந்த போது அவருடைய கையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. ஆனால் தற்போது ஆர்ஸ்தீப் சிங் காயம் குணமடைந்து விட்டதால் அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் எப்போதுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் ஆர்ஸ்தீப் சிங் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு நெருக்கடியை கொடுப்பார் என ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆன ஆகாஷ் தீப்பும் அணிக்கும் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரு வீரர்களும் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கு பெற்று பந்து வீசினார்கள். இதனால் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு சிராஜ், ஆகாஷ் தீப் சிங் ஆகிய மூன்று வீரர்களும் கடைசி டெஸ்டில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 29, 2025, 20:55 [IST]
Other articles published on Jul 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+