Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 3வது டெஸ்டில் இந்திய அணிக்குள் வரும் 6.3 அடி உயர வீரர்..பவுலிங் பலத்தை அதிகரிக்க திட்டம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய பவுலர் ஒருவர் அறிமுகம் ஆக வாய்ப்பு இருக்கின்றது. மற்ற இரண்டு மைதானங்களை விட லண்டன் லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும்.

அதே சமயம் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்து முதல் சில ஓவர்களை தாண்டி விட்டால் பேட்டிங்கிற்கு
சாதகமாக ஆடுகளம் இருக்கும். இந்த நிலையில் மற்ற எந்த மைதானத்தில் இல்லாத வகையில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது.

Ind vs Eng

அதில் மெயின் ஆடுகளும் ஒரு அளவுக்கு சரிவாக (slope) இருக்கும். இதன் மூலம் ஒரு முனையில் இருந்து மறுமுனை பந்து வீசும் போது அது காற்றைக் கிழித்துக்கொண்டு பந்து பேட்ஸ்மேனை தாக்கும். இது போன்ற பீட்ச் இருப்பதன் காரணமாக வீரர்கள் அதிக அளவு எல் பி டபிள்யு, அல்லது பவுல்ட் ஆக வாய்ப்பு இருக்கின்றது.

இதனால் மற்ற ஆடுகளங்களில் பந்து வீசுவதைப் போல் லார்ட்ஸ் மைதானத்தில் பந்து வீசினால் சரி வராது. சில சமயம் ரன்கள் அதிகமாக செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன ஆர்ஸ்தீப் சிங்கை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக்க கம்பீர் முடிவெடுத்து இருக்கிறார்.

இது போன்ற ஆடுகளங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் பிரசித் கிருஷ்ணாவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும்தான் எடுத்திருந்தார்.

குறிப்பாக முதல் ஓவரில் 13 ஓவர்கள் வீசி 72 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் ஆகும். இதனால் பிரசித் கிருஷ்ணா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் அவருக்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங் விளையாடுவார் என தெரிகிறது. இதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலம் அதிகரிக்கும். ஏற்கனவே பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ஸ்தீப் இணைந்தால் அது இங்கிலாந்துக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும்.

Story first published: Tuesday, July 8, 2025, 9:59 [IST]
Other articles published on Jul 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+