Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாதிரியான கருத்து இது? பிரஸ் மீட்டில் பொங்கிய அஸ்வின்.. கடும் கோபம்.. அதிர வைக்கும் காரணம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முதல் இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் எடுத்து சாதித்த நிலையில், தனது பவுலிங் குறித்து முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தற்போது மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அதிரடி பவுலிங்கில் இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு சுருண்டது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. அஸ்வின் மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார்.

 அஸ்வின்

அஸ்வின்

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின் பேசிய அஸ்வின், ஸ்பின் பவுலிங் பிட்ச் இங்கிலாந்து அணிக்கு பிடிக்கவில்லை. பிட்ச் ஸ்பீட் பவுலிங்கிற்கு ஆதரவாக இருந்தால் இங்கிலாந்து வீரர்கள் சந்தோசப்படுகிறார்கள். ஆனால் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதரவாக இருந்தால் கோபம் அடைகிறார்கள்.

பிட்ச்

பிட்ச்

பிட்ச் குறித்து ஏன் புகார் வைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இந்த மைதானத்தில் இரண்டு அணியும் நன்றாக பேட்டிங், பவுலிங் செய்து இருக்கிறோம். இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக ஆடி இருக்கிறது. ஆனால் ஏன் புகார் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்பீட் பவுலிங்

ஸ்பீட் பவுலிங்

ஸ்பீட் பவுலிங், ஸ்பின் பவுலிங் பிட்ச் இரண்டையும் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை பொறுத்த வரை ஸ்பீட் பவுலிங்கில் விளையாடுவதுதான் கடினம். 150 கிமீ வேகத்தில் ஸ்பீட் பவுலிங் பிட்சில் பந்து வரும் போது ஸ்விங் ஆனது என்றால் அதை எதிர்கொள்ள முடியாது.

அடிப்பது கடினம்

அடிப்பது கடினம்

இதை அடிப்பது கடினமாக இருக்கும். அதே சமயம் ஸ்பின் பவுலிங் பிட்சில் பந்து 90 கிமீ வேகத்தில் வரும் போது அது எப்படி ஸ்விங் ஆனாலும் எதிர்கொள்ள முடியும். இதை ஏன் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

என்ன கருத்து

என்ன கருத்து

இது என்ன மாதிரியான கருத்து என்று தெரியவில்லை. ஸ்பின் பவுலிங் என்பது கலை. அதை செய்ய நிறைய நுணுக்கங்கள் தேவை. நன்றாக பவுலிங் செய்யும் ஸ்பின் பவுலர்களை பாராட்ட வேண்டும், என்று அஸ்வின் குறிப்பிட்டு இருக்கிறார்.

அஸ்வின் பவுலிங்

அஸ்வின் பவுலிங்

நேற்று அஸ்வின் 5 விக்கெட் எடுத்த நிலையில் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது என்று புகார்கள் வைக்கப்பட்டது. இந்திய அணியின் பவுலிங் திறமைக்கு பிட்ச்தான் காரணம் என்று கூறப்பட்டதால் அஸ்வின் கோபம் அடைந்து இப்படி புகார் வைத்து இருக்கிறார்.

Story first published: Monday, February 15, 2021, 8:56 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+