Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பிட்ச் இது.. சேப்பாக்கம் பிட்சை உருவாக்கிய திருப்பூர்காரர்.. கோபத்தில் பிசிசிஐ.. காரணம் கோலி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சென்னை பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வெறியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

காரணம்

காரணம்

இந்த நிலையில் இந்த முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு சென்னை பிட்ச் முக்கிய காரணமாக இருந்தது. சென்னை பிட்ச் முதல் மூன்றரை நாட்கள் கொஞ்சம் கூட ஸ்விங் ஆகவில்லை. பவுலிங் செய்ய கொஞ்சம் கூட சாதகமாக இல்லை.

மோசமான நிலை

மோசமான நிலை

இதனால் இந்திய பவுலர்கள் திணறினார்கள். கடைசி ஒன்றரை நாட்கள் கூட பிட்ச் கொஞ்சமாகவே சுழன்றது. சென்னை சேப்பாக்கம் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு பெரிய அளவில் சாதகமாக இல்லை. இது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

 திணறல்

திணறல்

இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் கூட சென்னை பிட்சை போல மோசமாக பிட்சை பார்த்ததே இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சேப்பாக்கம் பிட்ச் வடிவமைப்பு மீது பிசிசிஐ அமைப்பு கோபத்தில் உள்ளது. இந்த பிட்சில் சில மாற்றங்களை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கோபம்

கோபம்

இந்த பிட்சை உருவாக்கியது திருப்பூரை சேர்ந்த வி ரமேஷ் குமார் என்று நபர். பிசிசிஐ அமைப்பின் முறையான பிட்ச் மேக்கிங் படிப்பை படித்துவிட்டு இவர் முதல்தர போட்டிகளில் பிட்ச் வடிவமைத்தார். இதில் ரமேஷ் முறையாக பயிற்சிகளை பெற்றுள்ளார்.

எங்கு

எங்கு

திருப்பூர், சேலம், கோவையில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அண்டர் 16, 19, 23 போட்டிகள் பலவற்றில் இவர் பிட்ச் வடிவமைத்தார் . இதன் காரணமாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் ரமேஷ் பிட்ச் வடிவமைத்துள்ளார். இவரின் திறமை பார்த்து இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது .

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் தற்போது இவர்தான் இரண்டாவது டெஸ்டுக்கும் பிட்ச் வடிவமைக்க உள்ளார். ஆனால் இவருடன் சேர்த்து கூடுதலாக மத்திய பிட்ச் மேற்பார்வை அதிகாரி ஒருவர் பிசிசிஐ மூலம் இந்த பிட்சை மேற்பார்வையிட உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பிட்சில் மாற்றங்களை செய்ய உள்ளனர்.

கோலி

கோலி

இந்த மாற்றத்திற்கு கோலியின் கோபம்தான் காரணம் என்கிறார்கள். கோலி பிட்ச் குறித்து புகார் அளித்தார். இதன் காரணமாகவே தற்போது பிட்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகிறது. பிட்ச் இந்திய அணிக்கு ஏற்றபடி மாற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, February 12, 2021, 23:12 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+