Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: மோர்க்கல் காதை கடிக்க சென்ற கம்பீர்.. டிரஸிங் ரூம் வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் எதிர்பார்க்காத வகையில் திரில் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவையாக இருந்தது.

இந்த சூழலில் களத்தில் ஜெமி ஸ்மித், ஜெமி ஓவர்டன் இருந்தனர். இதில் ஜெமி ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக கடந்த டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடியிருந்தார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

Gautam Gambhir

ஆனால் கடைசிவரை போராடி போர் குதிரை போல் செயல்பட்ட முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இந்தியாவின் வெற்றியை தங்கள் வசப்படுத்தினர். இதன் மூலம் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுதான் முதல் முறையாகும்.

பிசிசிஐ வெளியிட்ட வீடியோ:

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த கம்பீருக்கு இந்த டிரா மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனால் எப்போதும் அமைதியாக இருக்கும் கம்பீரே இம்முறை கத்தி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் டிரெஸ்ஸிங் ரூம் உள்ளே கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பயிற்சி குழுவினர் என்ன செய்தார்கள் என்பதை பிசிசிஐ வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அதில் கடைசி இரண்டு விக்கெட் இந்தியாவுக்கு தேவைப்பட்ட நிலையில் கம்பீர் உள்ளிட்ட பயிற்சி குழுவினர் பதற்றத்துடன் காணப்பட்டனர். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் கில்லுக்கு தங்களுடைய அறிவுரைகளை சைகை மூலம் காட்டினார்கள். அதன் பின் ஒன்பதாவது விக்கெட் விழுந்தவுடன் கம்பீர் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தார்.

மோர்க்கல் மீது ஏறி கம்பீர் கொண்டாட்டம்:

எனினும் கெஸ் ஆட்கிண்சன் கடைசி கட்டத்தில் சிக்சர் அடிக்க கம்பீர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தார். இந்திய பயிற்சியாளர்கள் குழுவினர் யாரும் அமராமல் நின்று கொண்டே இருந்தனர். இந்த நிலையில் சிராஜ் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியவுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் மகிழ்ச்சி பெருங்கடலால் நிரம்பியது.

பயிற்சியாளர் குழுவினர் ஒருவர் இன்னொருவரை கட்டிப்பிடித்து குதித்து கொண்டாடினர் அப்போது கம்பீரின் நண்பரும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் கம்பீரை கட்டிப்பிடித்த போது ,கம்பீர் அவர் மீது ஏறிக்கொண்டு அவருடைய காதை கடிக்க சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கம்பிருக்கு இவ்வளவு வெறியா என்று ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை குறிப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, August 5, 2025, 11:11 [IST]
Other articles published on Aug 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+