Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஐயோ போச்சே! படக்கூடாத இடத்தை தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த ஸ்டோக்ஸ்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சிராஜ் வீசிய பந்து ஒன்று கேப்டன் ஸ்டோக்ஸ் மர்ம உறுப்பை தாக்கியதால் அவர் வலியால் துடித்தார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுத்து சமனில் இருந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கியது.

Ben stokes

இந்த தருணத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜாக் கிராலி 22 ரன்களிலும், பென் டக்கட் 12 ரன்களிலும், ஆலி போப் நான்கு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 23 ரன்களில் வெளியேறினார்.

இதை அடுத்து இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோரூட் ஜோடி மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிந்து மீட்க போராடியது. இந்த தருணத்தில் தான் முகமது சிராஜ் வீசிய ஒரு பந்தை கணிக்க தவறிய பென் ஸ்டோக்ஸ் அதை அடிக்காமல் மிஸ் செய்ய, அது அவருடைய மர்ம உறுப்பை தாக்கியது.

இதனால் வலியால் துடித்த ஸ்டோக்ஸ் அப்படியே மைதானத்தில் உருண்டு படுத்துவிட்டார். இதனை எதிர் முனையில் பார்த்த ஜோ ரூட் விழுந்து விழுந்து சிரித்தார். எனினும் இந்திய வீரர்கள் ஸ்டோக்ஸ் இடம் பெரிதாக எதுவும் பொய் கேட்காமல் கடந்து சென்றனர். ஆனால் ஜடேஜா மற்றும் ஸ்டோக்ஸ் இடம் என்ன ஆயிற்று என்று சிந்தித்த படியே கேட்டார்.

இதனை அடுத்து மீண்டும் சிகிச்சை பெற்ற பின் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்ய திரும்பினார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸ் போது ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் அவருக்கு வந்து படக்கூடாது இடத்தில் பட்டு தாக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, July 13, 2025, 21:18 [IST]
Other articles published on Jul 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+