Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய அணியின் மெயின் வில்லன் கடைசி நாளில் வருவாரா? 174 அடித்ததற்கு இதான் காரணமா?

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தற்போது டிரா செய்ய இந்திய அணி போராடி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்கள் எடுக்க இந்திய அணி வெறும் 350 ரன்கள் தான் எடுத்தது.

இதற்கு காரணம் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்சின் அபாரமான பந்து வீச்சு மற்றும் புத்திசாலித்தனம் தான். முதல் இன்னிங்சில் வெறும் 72 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

Ben Stokes

இந்த தருணத்தில் பேட்டிங் செய்த போது அபாரமாக விளையாடி 141 ரன்கள் குதித்தார்.ஆனால் பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்கனவே உடல் பகுதியில் பிரச்சனை இருந்தது. பேட்டிங் செய்யும்போது சிராஜ் வீசிய பந்து ஒன்று அவரை தாக்கியது. இதனால் நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பந்து வீசிய போது ஸ்டோக்ஸ் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

இந்த நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் பந்து வீசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளர் மார்க்கஸ் டிரஸ்கோட்சிக் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு போன்ற பணிச்சுமையால் அவருடைய உடல் தகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவது நாள் அன்று அவர் பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம்.
எனினும் ஐந்தாவது நாள் காலையில் தான் அது குறித்து நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறினார். ஸ்டோக்ஸ் பந்து வீசாததால் தான் ராகுல், கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து 174 ரன்கள் சேர்த்தார்களா என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

தற்போது இந்த தொடரில் மிகவும் முக்கியமான கட்டம் ஐந்தாவது நாளில் நடைபெறுகிறது. இதனால் ஸ்டோக்ஸ் பந்து வீசுவாரா மாட்டாரா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வேலை ஸ்டோக்ஸ் பந்து வீசவில்லை என்றால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படும். அவர் பந்து வீச திரும்பினால் இந்திய அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தலாம்.

Story first published: Sunday, July 27, 2025, 7:30 [IST]
Other articles published on Jul 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+