For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: நான் எடுத்த முடிவில் தவறில்லை.. இந்தியாவும் நன்றாக விளையாடியது..சிறந்த தொடக்கம்-ஸ்டோக்ஸ்

லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இலக்கு என்ற பெருமையை இங்கிலாந்து அணி படைத்திருக்கிறது.

371 ரன்கள் என்ற இலக்கை வெறும் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி வென்றது. இந்த சூழலில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், இந்த மைதானத்தில் எங்களுக்கு நல்ல நினைவுகள் இருக்கின்றது.

Ben stokes

தற்போது இன்னொரு ஒரு நல்ல நிகழ்வு சேர்ந்து இருக்கின்றது. டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவது என்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுவும் கடைசி நாளில் பெரிய இலக்கை துரத்துவது மேலும் சிறப்பை கொடுத்திருக்கின்றது. பந்து வீசுவதற்கு முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது.

அப்போது நாம் தான் சிறந்த வீரர்கள் என்று மனதில் நினைத்து வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தவுடன் வெற்றி பெற என்ன வழி என்று யோசித்தோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியும் சிறந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நாங்களும் நன்றாக பந்து வீசினோம்.

இந்தியாவும் முதல் நாளில் அபாரமாக விளையாடியது தான். அதற்காக முதலில் பந்து வீசியது தவறான முடிவு என்று நான் நினைக்கவே இல்லை. பேட்டிங் என்னால் நம்பவே முடியவில்லை. தொடக்க வீரராக களமிறங்கி இலக்கை துரத்துவது என்பது கடினமான பணி. ஆனால் ஜாக் கிராலியுடன் இணைந்து டக்கட் எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஜாக் கிராலி பொறுமையாக நின்று 60 ரன்கள் அடித்ததும் எங்கள் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது போன்ற பெரிய இலக்கை வெற்றிகரமாக திரட்டுவது ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கையை கொடுக்கும். இந்த தொடரில் சிறந்த ஒரு தொடக்கத்தை நாங்கள் பெற்று இருக்கின்றோம். இந்த வெற்றிக்கு பல வீரர்களின் திறமையும் ஒரு காரணம் நாங்கள் பில்டிங்கில் அதிக நேரம் நின்றோம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் உத்வேகத்துடன் நாங்கள் களத்தில் செயல்பட்டோம்.

குறிப்பாக ஜோஸ் டாங் வீசிய பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்சில் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆடுகளம் கடைசி நாளில் நன்றாகத் தான் இருந்தது. அதைவிட முக்கியம் நல்ல உத்வேகத்துடன் வீரர்கள் இருக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம். எங்களுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எங்களுடைய டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது எங்களுக்கு இது சிறந்த ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. இனி அடுத்தடுத்த போட்டிகளில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 25, 2025, 8:17 [IST]
Other articles published on Jun 25, 2025
English summary
Ind vs Eng- Ben Stokes lauds Ben Duckett Effort as unbelievable after Historical Win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+