IND vs ENG: ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், மீண்டும் வந்து பேட்டிங்.. காயம் காரணமாக பந்துவீச முடியுமா?
மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் இருக்கின்றது. முதலில் இந்திய அணி 358 ரன்கள் எடுக்க தற்போது இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்திருக்கிறது.
இது இந்திய அணியை விட 186 ரன்கள் கூடுதலாகும். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சி இருப்பதால், இங்கிலாந்து அணி இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடிக்க முயற்சி செய்யும்.தற்போது கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருக்க இந்தியாவை விட 300 ரன்கள் கூடுதலாக பெற இங்கிலாந்து முயற்சி செய்யும்.

ஆனால் இங்கிலாந்து அணி கூடுதலாக 300 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.ஆனால் பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது 66 ரன்கள் எடுத்திருந்தார்.
அப்போது சிராஜ் வீசிய பந்து ஒன்று அவரை தாக்கியது. இதனால் போட்டியிலிருந்து அவர் பாதியில் விலகினார். எனினும் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததை அடுத்து மீண்டும் பெண் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார். பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காலில் காயம் ஏற்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் அவருக்கு பந்து தாக்கி காயம் ஏற்பட்டு இருப்பதால், அவருடைய உடல் தகுதி பெரும் அளவு பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 24 ஓவர் வீசி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் தற்போது களத்தில் 134 பந்துகளை எதிர் கொண்டு 77 ரன்கள் எடுத்திருக்கின்றார்.
பென் ஸ்டோக்ஸ் நாளையும் பேட்டிங் செய்ய தொடர்வார். இதனால் உடல் தகுதி மேலும் பாதிக்கப்படும். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பென் ஸ்டாக்ஸ் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக கருதப்படும். எனினும் ஸ்டோக்ஸ் உடல் தகுதி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் ஆலி போப், கடுமையாக களத்தில் உழைத்து வருகிறார். இது அவருடைய உடல் தகுதியை பாதித்திருக்கிறது. எனினும் இன்றைய நாள் ஓய்வுக்கு பின் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் தனது பணியை செய்ய தயாராகி விடுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications