Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: வெற்றியின் அருகே வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது..இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பையை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்து கொண்டன. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியின் அருகே வந்த நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தங்கள் வசம் ஆக்கினர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ் தோல்வி குறித்து பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது இந்த போட்டியில் நான் பங்கேற்கவில்லை. இதனால் எனக்கு மனது கடினமாக இருக்கின்றது.இந்த போட்டியிலும் இரண்டு அணி வீரர்களும் கடுமையாக போராடி செயல் பட்டு இருக்கிறார்கள்.

Ben stokes

இரு அணி வீரர்களும் அவ்வளவு பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த தொடரில் நான் இடம் பெற்றது சிறப்பான ஒரு விஷயமாக கருதுகின்றேன். எங்களால் எல்லைக்கோட்டை கடந்து தொடரை கைப்பற்ற முடியவில்லை என்று நினைக்கும்போது ஏமாற்றமாக இருக்கின்றது. கிறிஸ் வொக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கே எங்கள் மனதில் இடமில்லை.

ஏனென்றால் உடைந்த கை உடைந்த விரல்கள், உடைந்த கால்களுடன் எங்கள் அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். நாட்டிற்காக விளையாடுவது என்றால் எவ்வளவு சிறப்பானது என்று இதிலிருந்து நாம் பார்த்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்த தொடருமே,அபாரமாக இருந்தது. சில தருணங்களில் இரு அணி வீரர்களும் உணர்ச்சிவசப்பட்டு சில சம்பவங்களில் ஈடுபட்டார்கள்.

இதுகுறித்து நாங்கள் யாரும் அழுது கொண்டு புகார் எல்லாம் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் நான் பந்து வீசிய முறை எனக்கு திருப்தியை கொடுத்தது. தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் நான் ஈடுபடுகின்றேன். இன்னும் கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வருகிறது.

அதற்காக தயாராக வேண்டும் எங்கள் அணியின் ஒரு முன்னணி பவுலர் போட்டியிலிருந்து விலகிய பிறகு மற்ற பவுலர்கள் ஆட்டம் முழுவதும் பந்து வீசியது உண்மையிலேயே கடினமான பணி. ஆனால் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் அணி வீரர்கள் தங்களுடைய மன வலிமையை காட்டினார்கள்.

இந்த ஐந்து நாட்கள் முழுவதும், இது அப்படி இருந்தால் என்னவாக இருக்கும் என்று பல விஷயங்களை நாம் குறிப்பிட்ட சொல்லிருக்கலாம். அதுதான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஒரு விஷயமாக நான் பார்க்கின்றேன். நாங்கள் வீரர்களிடம் உங்களுடைய நூறு சதவீத பங்களிப்பை கொடுங்கள் என்று கேட்டோம். அதனை வீரர்கள் தந்திருக்கிறார்கள் என ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 4, 2025, 18:17 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+