Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - இந்தியாவுக்கு பாதகமாக விழுந்த டாஸ்.. ரோகித் எடுத்த தைரியமான முடிவு

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் மழை நின்றதை எடுத்து போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கிறது. மழை எப்போது வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.இதனால் டக்வர்த் லூயிஸ் விதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

t20 world cup ind vs eng toss

இதன் காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் மழை குறுக்கிட்டு எந்த இலக்கு துரத்த வேண்டும் என்பது தெளிவாக தெரியும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது தங்களுக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இங்கிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா,வானிலை தற்போது நல்ல முறையில் முன்னேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகப்பெரிய போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்று தாம் நினைத்ததாக குறிப்பிட்ட ரோகித் சர்மா, ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால் போட்டி செல்ல செல்ல ஆடுகளம் தோய்வாக மாறும் என்று குறிப்பிட்டார்.

இதேபோன்று தங்களது அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரோகித் சர்மா கூறினார். தற்போது இந்த ஆட்டத்தில் மழை குறிக்கிடவில்லை என்றால் அது நிச்சயம் இந்தியாவுக்கு தான் சாதகமாக இருக்கும். ஒருவேளை மழை குறுக்கிட்டு போட்டி தடைபடும் சூழல் ஏற்பட்டால் அது நிச்சயம் இங்கிலாந்துக்கு தான் கை கொடுக்கும்.

இதனால் மழை குறுக்கிடவே கூடாது என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டால் அது சிறப்பாக இருக்கும். ஒருவேளை மழை குறுக்கிட்டு ஆட்டமே தொடர முடியாத நிலை ஏற்பட்டால், இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றதாக அறிவிக்கப்படும். ஆனால் வானிலை தற்போது நல்ல முறையில் முன்னேறி இருக்கிறது. இதனால் மழை குறுக்கிடும் அளவும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 27, 2024, 21:07 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+