Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஏமாற்றினாரா 3ஆம் நடுவர்.. ஜெமி ஓவர்டன் அவுட்டா? நாட் அவுட்டா? வெடித்த சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் அடுத்த ஒரு முடிவு இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடிவடைந்து விடும்.

ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றியோ இல்லை டிராவோ பெற்றால், அந்த அணி தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திருக்கிறது.

Jamie overton

இந்த தருணத்தில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இங்கிலாந்த அணி அபாரமாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி இந்தியாவை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினர். இந்த நிலையில் ஹாரி புரூம் 111 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 105 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆன ஜெமி ஸ்மித் மற்றும் ஜெமி ஓவர்டனும் களத்தில் நின்று விளையாடினர். அப்போது கீழ் வரிசை வீரர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர்.

இந்த கட்டத்தில் தான் ஆட்டத்தின் 76.2 வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து ஒன்றை ஜிம்மி ஓவர்டன் அடித்து அது கீப்பரிடம் கேட்ச் ஆனது. இது அவுட்டா என்று கள நடுவர்களுக்கு தெரியவில்லை. இதனால் மூன்றாம் நடுவரின் உதவியை கள நடுவர்கள் நாடினார்கள். அப்போது ரீப்ளேவில் பார்த்தபோது பந்து பேட்டில் பட்ட போதும் தரையில் பட்டபோதும் ஸ்நிக்கோ மீட்டரில் அதிர்வுகள் தெரிந்தது.

இதனால் இது அவுட்டா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதை அடுத்து மூன்றாம் நடுவர் மீண்டும் மீண்டும் இந்த காட்சியை பார்த்தார். அதில் பந்து தரையில் பட்ட போது தான் ஸ்நிக்கோமீட்டர் அதிர்வுகளை காட்டுவதாகவும், பேட்டில் பந்து பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி இது நாட் அவுட் என கூறிவிட்டார். இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது .

Story first published: Sunday, August 3, 2025, 22:28 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+