Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு எதிராக 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை முறியடிப்பு.. தெறிக்க விட்ட இங்கிலாந்து ஜோடி!

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | இங்கிலாந்து வெற்றி! முதல் தோல்வியை பதிவு செய்த இந்தியா

பிர்மிங்காம் : இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜானி பேரிஸ்டோ - ஜேசன் ராய் இந்திய அணியை புரட்டிப் போட்டு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரிஸ்டோ சதம்

பேரிஸ்டோ சதம்

இந்தப் போட்டியில் ஜானி பேரிஸ்டோ சதம் அடித்து அசத்தினார். 109 பந்துகளில் 111 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களை நொறுக்கிய இவர் 6 சிக்ஸர்கள் அடித்தார்.

ராய் அரைசதம்

ராய் அரைசதம்

மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராய், இந்திய அணியின் தவறால், கேட்ச் பிடிக்கப்பட்டும், ரிவ்யூ கேட்காததால் தப்பினார். அதை பயன்படுத்தி அரைசதம் அடித்த ராய் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாதனை கூட்டணி

சாதனை கூட்டணி

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் இது தான். இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனையை முறியடித்து இந்த சாதனையை செய்துள்ளது.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மான்ட் ஹெய்னஸ் இந்திய அணிக்கு எதிராக 138 ரன்கள் சேர்த்து இருந்ததே உலகக்கோப்பை தொடரில் இதுவரை இருந்த சாதனை. இந்த சாதனையை முறியடித்து, பேரிஸ்டோ - ராய் ஜோடி 160 ரன்கள் சேர்த்தது.

இந்தியா மோசமான சேஸிங்

இந்தியா மோசமான சேஸிங்

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 102, கோலி 66 ரன்கள் குவித்தனர். பண்ட் 32, பண்டியா 45 ரன்கள் எடுத்து தங்களால் முடிந்த அளவு போராடினர். எனினும், தோனி, ஜாதவ் படு மோசமாக கடைசி 4 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில், தோல்வியை ஒப்புக் கொண்டு, போராடாமல், சிங்கிள் ரன் எடுத்து வெறுப்பேற்றினர்.

Story first published: Monday, July 1, 2019, 0:19 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+