Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியை நோக்கி ஆடிய தோனிக்கு கேப்டன் விராட் கோலி ஆதரவு! என்ன சொன்னார்?

Recommended Video

WORLD CUP: IND VS ENG: KOHLI SUPPORTS DHONI | தோனிக்கு கேப்டன் விராட் கோலி ஆதரவு!- வீடியோ

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி வெற்றி பெற முயலாமல், தோல்வியை நோக்கி பேட்டிங் செய்ததை, கேப்டன் விராட் கோலி ஆதரித்து கருத்து கூறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி - ஜாதவ் கடைசி கட்டத்தில் தோல்வியை நோக்கி பேட்டிங் செய்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இந்தியா சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் ஆடியது. துவக்க வீரர் ராகுல் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கோலி, ரோஹித் சர்மா நிதானமாக பேட்டிங் ஆடினர். அவர்களுக்கு பின் ஹர்திக் பண்டியா அதிரடியாக ஆடினார். ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

தோனி அதிர்ச்சி

தோனி அதிர்ச்சி

அப்போது களத்தில் தோனி - கேதார் ஜாதவ் இருந்தனர். தோனி பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல், சிங்கிள் ரன்களாக எடுத்தார். ஜாதவ்வும் அப்படியே ஆடினார். இது தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். ஒருவேளை இந்தியா கடைசி பந்து வரை போராடி தோற்று இருந்தால் யாருமே தோனி குறித்து பேசி இருக்க மாட்டார்கள். ஆனால், தோனியின் பேட்டிங் கடும் விமர்சனங்களை கிளப்பியது.

கோலி ஆதரவு

கோலி ஆதரவு

ஆனால், கேப்டன் விராட் கோலி போட்டி முடிந்து பேசும் போது, தோனிக்கு ஆதரவாக பேசியது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் கூறுகையில், தோனி உண்மையில் பந்தை அடிக்க முயன்றார். ஆனால், பந்து செல்லவில்லை. இங்கிலாந்து அணி சரியான இடங்களில் பந்து வீசினார்கள். அதனால், ஒரு பக்கம் கடினமாக இருந்தது. அடுத்த போட்டியில் நாங்கள் அமர்ந்து பேசி எல்லாவற்றையும் சரி செய்வோம் என்றார்.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

தோனி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடவில்லை என்பதே உண்மை. சச்சின் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விமர்சனம் செய்கையில் தோனியின் நோக்கம் குறித்து விமர்சனம் செய்தார். அது தான் இங்கிலாந்து போட்டியிலும் பிரச்சனையாக மாறியது. கேப்டன் கோலி மூத்த வீரர் என்பதற்காக தோனிக்கு ஆதரவாக பேசி இருந்தாலும், உண்மையில், தோனி செய்தது சரிதானா? என்ற கேள்வி அவருக்கும் இருக்கும்

Story first published: Monday, July 1, 2019, 13:02 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+