Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ரசிகர்கள் அநியாயம் பண்றாங்க.. எங்க ஊர்ல எங்களுக்கே மரியாதை இல்லை.. பொங்கும் இங்கிலாந்து!

பிர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை போட்டியை காண அதிக இந்திய ரசிகர்களே வந்திருந்தனர்.

இது இங்கிலாந்து ரசிகர்கள் இடையே எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்கு இங்கிலாந்து ரசிகர்களுக்கு குறைவான டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

இது இங்கிலாந்து ரசிகர்கள் இடையே விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது, ஏற்கனவே, பலரும் உலகக்கோப்பையை ஐசிசி சரியாக நடத்தவில்லை என புகார் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்வும் அதில் இணைந்துள்ளது.

அதிக இந்தியர்கள்

அதிக இந்தியர்கள்

இந்தியா - இங்கிலாந்து போட்டியைக் காண வழக்கம் போல இந்திய ரசிகர்களே அதிகம் வந்தனர். உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளில் எல்லாம் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே வந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தனர். அந்த அளவிற்கு இல்லை என்றாலும், இங்கிலாந்து போட்டிக்கு அவர்களை விட இரண்டு - மூன்று மடங்கு அதிகமாக இந்திய ரசிகர்களே நிரம்பி இருந்தனர்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது 55 சதவீத டிக்கெட்கள் இந்திய ரசிகர்களுக்கும், 42 சதவீத டிக்கெட்கள் இங்கிலாந்து ரசிகர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் 24,500 இருக்கைகள் இருக்கும் நிலையில், சுமார் 13,500 இருக்கைகளை இந்திய ரசிகர்கள் ஆக்கிரமிப்பார்கள் என்ற நிலை.

மறு விற்பனை

மறு விற்பனை

இது தவிர, இந்திய ரசிகர்கள் பிளாக்கில் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க தயாராக இருக்கும் நிலையில், இங்கிலாந்து மக்கள் பலர் தங்கள் டிக்கெட்களை அதிக விலை வைத்து அவர்களிடம் விற்று இருக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு சிக்கல்

இங்கிலாந்துக்கு சிக்கல்

இதனால், தீவிர இங்கிலாந்து ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். மேலும், இந்த நிலை இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவே இருக்கும். இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில், ரசிகர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அது அந்த அணிக்கு உதவியாக இருக்கும். மாறாக, இந்திய ரசிகர்கள் தங்கள் அணி வீரர்களுக்கு கோஷம் எழுப்பி வந்தால், அது இங்கிலாந்து அணிக்கு தொந்தரவாக அமையும். பவுண்டரி அருகே நிற்கும் வீரர்கள் எரிச்சல் அடையும் சம்பவங்களும் நடைபெறும்.

Story first published: Sunday, June 30, 2019, 16:19 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+