Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!! திட்டம் போட்டு பாகிஸ்தானை காலி செய்த இராணுவ அதிகாரி தோனி!

பிர்மிங்காம் : உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் தோனி பொறுமையாக பேட்டிங் ஆடிய விதம் பெரும் சர்ச்சையானது. அவரது ஆட்டத்தால் இந்தியா போராடாமல் தோல்வி அடைந்தது என பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், நையாண்டி ரசிகர்கள் சிலர், தோனி ஒரு ராணுவ அதிகாரி (கௌரவ லெப்டினன்ட் கலோனல்) என்பதால், எதிரி நாடான பாகிஸ்தானின் உலகக்கோப்பை வாய்ப்பை முடித்து விட்டார் என கிண்டல் அடித்தார்கள். எப்படி?

சிக்கலில் பாகிஸ்தான்

சிக்கலில் பாகிஸ்தான்

இந்தியா, இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் அந்த அணி அரையிறுதி செல்வதில் சிக்கல் ஏற்படும். இங்கிலாந்து அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். அது பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பாக மாறும் என்ற நிலை இருந்தது. பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வந்தனர். இந்த ஒரு போட்டிக்கு மட்டும் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கும் என கூறி வந்தனர்.

இந்தியா மந்தமான பேட்டிங்

இந்தியா மந்தமான பேட்டிங்

இந்த நிலையில், போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. பெரிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி மந்தமாக பேட்டிங் செய்து வந்தது. கோலி - ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியின் ரன் ரேட் ஐந்தை ஒட்டியே இருந்தது.

தோனி - ஜாதவ் சர்ச்சை

தோனி - ஜாதவ் சர்ச்சை

இதனால் கடைசி நான்கு ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. களத்தில் தோனி - கேதார் ஜாதவ் பேட்டிங் செய்தனர். தோனி சம்பந்தமே இல்லாமல், பவுண்டரி அடிக்காமல், சிங்கிள் ரன்கள் எடுத்து வந்தார். ஜாதவ்வும் அவருடன் சேர்ந்து கொண்டு சிங்கிள் எடுத்து வெறுப்பேற்றினார். அதனால், இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இந்திய ரசிகர்கள் சிலர் ராணுவ அதிகாரியான தோனி, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து, அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக்கி விட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர். தோனி தன் வேலையை சரியாக செய்து இருக்கிறார் என்றார்கள்.

உண்மையா?

உண்மையா?

கடந்த சில நாட்களாக சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதி செல்ல விடாமல் செய்யும் என கூறி வந்தனர். இந்த நிலையில், இந்திய அணி மந்தமாக பேட்டிங் செய்தும், தோனி கடைசி நேரத்தில் பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல் இருந்ததும், இதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று தோன்ற வைக்கிறது.

Story first published: Monday, July 1, 2019, 11:31 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+