For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய இடத்தில் கோட்டை விட்ட ஷமி.. 5 விக்கெட் எடுத்து ஒரு புண்ணியமும் இல்லை!

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய இடத்தில் கோட்டை விட்ட ஷமி!

பிர்மிங்காம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

5 விக்கெட்கள் வீழ்த்தினாலும், ஷமி பந்துவீச்சு மோசமாகவே இருந்தது. அதே சமயம் பும்ரா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் அவர் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.

இங்கிலாந்து அதிரடி பேட்டிங்

இங்கிலாந்து அதிரடி பேட்டிங்

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அதிரடியாக பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் அதிரடியை துவக்கி வைத்தனர் அவர்களை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ்-உம அதிரடியாக ரன் குவித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 337 ரன்கள் குவித்தது.

ஷமி 5 விக்கெட்

ஷமி 5 விக்கெட்

இங்கிலாந்து அணி இழந்த 7 விக்கெட்களில் 5 விக்கெட்களை வீழ்த்தியது முகமது ஷமி. அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி விட்டாரே என நம்மால் பாராட்ட முடியவில்லை. இத்தனைக்கும் ஷமி வீழ்த்திய 5 பேட்ஸ்மேன்களுமே அதிரடி வீரர்கள் தான்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

அதற்கு முக்கிய காரணம், ஷமி அதிக ரன்களை வாரி இறைத்தார். 10 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் வீசிய ஷமி 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்கள் கொடுத்தவர் ஷமி தான்.

பும்ரா அசத்தல்

பும்ரா அசத்தல்

இந்தப் போட்டியில் பும்ரா மட்டுமே இந்திய அணியில் அசத்தலாக பந்து வீசினார். அவர் 10 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஹர்திக் பண்டியா 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தார். சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 72 ரன்கள் கொடுத்தும், சாஹல் 88 ரன்கள் கொடுத்தும் இருவருமே ரன்களை வாரி இறைத்தனர்.

பயன்

பயன்

ஷமி எடுத்த 5 விக்கெட்கள் எடுக்காமல் போயிருந்தாலும் இங்கிலாந்து அணி இதே அளவு ரன்களை தான் எட்டி இருக்கும். கடைசி சில ஓவர்களில் ஷமி விக்கெட் எடுத்த போதும், அந்த ஓவர்களில் ரன் எடுப்பது குறையவில்லை. ஆக ஷமி 5 விக்கெட்கள் எடுத்து சாதனை புரிந்தாலும், அது அணிக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை.

Story first published: Sunday, June 30, 2019, 22:40 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
IND vs ENG Cricket World cup 2019 : Mohammed Shami took 5 wickets but its not useful
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+