Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய விவிஎஸ் லக்ஷ்மன்.. இந்தியாவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த ஐபிஎல்!!

பிர்மிங்காம் : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்ததற்கு ஒரு வகையில் ஐபிஎல் காரணமாக இருந்துள்ளது.

அதே போல, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் காரணமாக இருந்துள்ளார்.

விவிஎஸ் லக்ஷ்மன், இங்கிலாந்து அணியில் நேற்று சதம் அடித்த பேரிஸ்டோவிற்கு ஒரு முக்கிய உதவியை செய்துள்ளார். அது தான் இந்திய அணிக்கு ஆப்பு வைத்துள்ளது.

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அதிரடி

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சிதற அடித்து ஆடியது. அதிக சிக்ஸர்களும் அடித்தனர். 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது இந்தியா. உண்மையில், இந்திய அணி பந்துவீச்சில் தோல்வி அடைந்தது என்பதே உண்மை.

பேரிஸ்டோ சதம்

பேரிஸ்டோ சதம்

இங்கிலாந்து அணியின் பேரிஸ்டோ அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் தான் இங்கிலாந்து அணியின் தூணாக இருந்தார். 31 ஓவர்கள் வரை களத்தில் நின்ற அவர் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

சுழற் பந்துவீச்சில் அதிரடி

சுழற் பந்துவீச்சில் அதிரடி

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை குறிபார்த்து பதம் பார்த்தார் பேரிஸ்டோ. சாஹல் - குல்தீப் யாதவ் பந்துவீச்சு என்றாலே மற்ற அணிகள் தடுமாறிய நிலையில் பேரிஸ்டோ எந்த வகையிலும் தடுமாறவில்லை.

விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சி

விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சி

இது குறித்து போட்டிக்கு பின்னர் பேசிய பேரிஸ்டோ ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆடுவது என்பது குறித்து நிறைய உதவி செய்தார் என்று குறிப்பிட்டார்.

ஆப்பு வைத்த ஐபிஎல்

ஆப்பு வைத்த ஐபிஎல்

ஆக, இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் தான் காரணமாக இருந்துள்ளது. தற்போதுள்ள இந்திய அணி வலுவாக இருப்பதற்கு ஐபிஎல் எப்படி காரணமோ அதே போல, சில பெரிய தோல்விகளுக்கும் அதுவே காரணமாக உள்ளது.

Story first published: Monday, July 1, 2019, 20:48 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+