For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்!

பிர்மிங்காம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்தப் போட்டியில் கடந்த போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத விஜய் ஷங்கருக்கு இங்கிலாந்து போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இது இந்திய ரசிகர்கள் இடையே லேசான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் கோலியின் இந்த முடிவு சரியாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

ரிஷப் பண்ட் ஆட வேண்டும்

ரிஷப் பண்ட் ஆட வேண்டும்

விஜய் ஷங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் எதிர்பார்த்ததை விட அபாரமாக செயல்பட்டார். எனினும், அந்தப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. குறைந்த ரன்களே எடுத்து, தன் விக்கெட்டை இழந்து வந்தார். அதனால், விஜய் ஷங்கரை அணியின் இருந்து நீக்கி விட்டு, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

எனினும், விஜய் ஷங்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க கேப்டன் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமான போட்டி ஆகும். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நேரடியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதோடு, இந்தியா உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியே அடையாத அணி என்ற பெருமையையும் பெறும்.

கோலி பேட்டி

கோலி பேட்டி

கோலி பேட்டி அளித்த போது, கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் அடிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். விஜய் ஷங்கர் விரைவில் பெரிய அளவில் ரன் குவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். கோலி இப்படி பேசியதன் மூலம், விஜய் ஷங்கர் இங்கிலாந்து போட்டியில் வாய்ப்பு பெற உள்ளார் என கருதப்படுகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

விஜய் ஷங்கர் சரியாக ஆடாத நிலையிலும், கேப்டன் கோலி தொடர்ந்து வாய்ப்பு அளித்தால், அதற்கு முக்கிய காரணம், வெற்றி பெற்ற அணியை அவர் மாற்ற விரும்பவில்லை என்பதே. விஜய் ஷங்கர் சரியாக ஆடாவிட்டாலும், இந்திய அணி அவர் ஆடிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Sunday, June 30, 2019, 11:00 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
Cricket World cup 2019 : Vijay Shankar will play against England
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+