Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு மோசமான ரெக்கார்டா? சாஹலுக்கு தர்ம அடி கொடுத்த இங்கிலாந்து வீரர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | சாஹலுக்கு தர்ம அடி கொடுத்த இங்கிலாந்து வீரர்கள்!

பிர்மிங்காம் : இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான சாதனையை செய்தார்.

இந்தியா - இங்கிலாந்து போட்டி பிர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற தீர வேண்டும் என்ற நிலை இருந்தது.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

இங்கிலாந்து அணி துவக்கத்தில் அதிரடியாக பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் பேரிஸ்டோ - ஜேசன் ராய் அதிரடி காட்டியதால் கேப்டன் விராட் கோலி பவர்பிளேவில் சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச அழைத்தார்.

சாஹல் மீது நம்பிக்கை

சாஹல் மீது நம்பிக்கை

சாஹல் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருப்பதால், இந்த முறையும் விக்கெட் எடுப்பார் என நம்பி கோலி பந்தை அவரிடம் கொடுத்தார். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் பும்ரா தவிர யார் பந்து வீசினாலும் வெளுத்துக் கட்டினார்கள்.

ரன் மழை

ரன் மழை

சாஹல் பந்துகளை துவம்சம் செய்த இங்கிலாந்து வீரர்கள் அவர் பந்துவீச்சில் மட்டும் ஆறு சிக்ஸர்கள் விளாசினர். சாஹல் 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இது சாஹலின் மோசமான ரெக்கார்டாக மாறியது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

உலகக்கோப்பை தொடரில் இந்திய பந்துவீச்சாளரின் மிக மோசமான பந்துவீச்சு இது தான். சாஹல் 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்து இந்திய மோசமான உலகக்கோப்பை பந்துவீச்சு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் 87 ரன்கள், காவ்ரி 83 ரன்கள், அஸ்வின் 75 ரன்கள், மோகித் சர்மா 75 ரன்கள் கொடுத்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் மோசம்

ஒருநாள் போட்டிகளில் மோசம்

மேலும், ஒருநாள் போட்டிகளில் தன் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் சாஹல். உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ்வை விட அதிக விக்கெட்கள் வீழ்த்தி நம்பிக்கை அளித்து வந்த சாஹல், கேப்டன் தன்னை நம்பி ஓவர் கொடுத்தும் சொதப்பினார். இவரது மோசமான சாதனைக்கு பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சும் ஒரு காரணம்.

Story first published: Sunday, June 30, 2019, 21:47 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+