Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களின் சாபம்? அன்று கோலி கத்தியதில் இருந்து, தொடர்ந்து சொதப்பும் கிங்.. என்ன நடந்தது?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் அதற்கு சிஎஸ்கே ரசிகர்களின் சாபம் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியே வந்திருக்கிறது. விராட் கோலிக்கு இந்தியா முழுவதும் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விராட் கோலி இதுவரை கேப்டனாக எந்த ஐசிசி பட்டத்தையும், ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றதில்லை இதனால் விராட் கோலி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என சி எஸ் கே ரசிகர்களை எதிர்பார்த்தனர்.

t20 world cup ind vs eng virat kohli

ஆனால் இது அனைத்தும் மே 18ஆம் தேதி இரவோடு மாறிவிட்டது. ஆர்சிபி, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி குறிப்பிட்ட இலக்கு எட்டினாலே அடுத்த சுற்றுக்கு சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலி சிஎஸ்கே விக்கெட்டுகள் விழுந்த போதெல்லாம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். ரசிகர்களை பார்த்து கத்துவது, சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து வாயை மூட சொல்வது என்று பல அராத்து செயல்களை ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அது மட்டும் அல்லாமல் ஆர்சிபி ரசிகர்களும் படும் மோசமாக நடந்து கொண்டனர். இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் விராட் கோலியின் செய்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியின் ஹேட்டர்களாக மாறிவிட்டார்கள். அப்போது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் விராட் கோலி ஆணவத்துடன் நடந்து கொள்வதாகவும், இனி அவரை கொண்டாடப் போவதில்லை என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக சாடி வந்தனர்.

அப்போது ஆர் சி பி ரசிகர்கள் ஐபிஎல் தொடரை வேண்டுமானாலும் நீங்கள் திட்டலாம். ஆனால் இந்திய அணி என்றால் நீங்கள் விராட் கோலியிடம் வந்து தான் ஆக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் விராட் கோலி தற்போது ஆணவத்துடன் நடந்து கொண்டதால், பேட்டிங்கில் பெரியதாக சாதிக்கப் போவதில்லை என்று சாபம் விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு விராட் கோலி ஒரு முறை கூட அரை சதமோ இல்லை 40 ரன்களோ தொடவில்லை. அந்த ஆட்டத்திற்கு பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 33 ரன்கள் தான் சேர்த்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ஏழு போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 75 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Friday, June 28, 2024, 1:03 [IST]
Other articles published on Jun 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+