Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ராகுலை தொட்ட, நீ கெட்ட! விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு கிடைக்கும் சாபம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையில் சுப்மன் கில்லும் கேஎல் ராகுலும் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரராக களமிறங்கி புதிய பந்தில் ரன்கள் சேர்ப்பது என்பது கடினமான பணியாகும்.

ஆனால் ராகுல் இந்த தொடரில் தொடக்க வீரராக விளையாடிய 500 ரன்கள் குவித்து இருக்கின்றார். இது ராகுலின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் ராகுல் இந்திய ஏ அணியுடன் புறப்பட்டு வந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார்.

KL Rahul

இதைப் போன்று இந்த தொடரில் தான் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் விளையாடி ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் அவருக்கு கிடைத்திருக்கின்றது.

இந்த தொடரில் ராகுல் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடித்திருக்கின்றார். இதனிடையே ராகுலை விக்கெட்களை வீழ்த்தும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதாக ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு கிண்டல் அடித்திருக்கின்றார்.இதனால் ராகுலை நீங்கள் தொட்டால் கெட்டு விட்டீர்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் எந்த பவுலர் ராகுலின் விக்கெட்டுகளை எடுக்கிறாரோ, அவர் காயம் அடைந்து தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படுவதாக அந்த ரசிகர் சுட்டி காட்டியுள்ளார்.குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் விக்கெட் வீழ்த்திய பஷீர் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறி இருப்பதாக அந்த ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நான்காவது டெஸ்ட் போட்டியில் ராகுல் விக்கெட்டை எடுத்த ஸ்டோக்ஸ் காயம் அடைந்து தொடரை விட்டு வெளியேறி விட்டதாகவும் இதே போன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விக்கெட் வீழ்த்தி அவரும் காயமடைந்து போட்டியிலிருந்து விலகி விட்டதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் விக்கெட்டை வீழ்த்திய ஜோஸ் டங் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Saturday, August 2, 2025, 16:38 [IST]
Other articles published on Aug 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+