Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட்டை அவமதித்த கோலி? பேட்டிங் வரிசையால் இந்திய அணியில் பிளவு.. வெடித்தது சர்ச்சை

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

t20 உலக கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் பல பிரச்சனை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒன்பது பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

t20 world cup ind vs eng virat kohli

நடப்பு தொடரில் விராட் கோலி மொத்தமாகவே 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலி மிகவும் ஏமாற்றத்துடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தார். அப்போது விராட் கோலி அமைதியாக அமர்ந்திருந்த போது அங்கிருந்து வந்த ராகுல் டிராவிட் அவரை சமாதானப்படுத்தும் வகையில் மேலே கையை வைத்தார். ஆனால் ராகுல் டிராவிட்டை அவமரியாதை செய்வது போல் விராட் கோலி ஏதோ சொல்ல டிராவிட் அப்படியே நின்றவாரு திரும்பி சென்று விட்டார்.

இதன் மூலம் இந்திய அணியில் ஏதோ ஒரு பிரச்சனை நிலவுகிறது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி தொடர்ந்து சொதப்பி வருவதால் தமக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. எனினும் இதற்கு ஒப்புக் கொள்ளாத ரோகித் சர்மா- டிராவிட் கூட்டணி விராட் கோலியை தொடர்ந்து தொடக்க வீரராகவே களம் இறக்கி வருகிறது.

இதுதான் விராட் கோலியை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக தான் ராகுல் டிராவிட்டை அவமதிக்கும் வகையில் விராட் கோலி நடந்து கொண்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவது தான் சரியான முடிவு என்றும் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் தான் இந்த இடம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்திய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Thursday, June 27, 2024, 23:24 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+